Dr Halim Mohammad bergambar bersama peserta syarahan perdana bertajuk ‘Selangor As Maritime Getaway To The World’ di UNISEL, Shah Alam pada 18 Disember 2019.
ECONOMYHEALTHNATIONALPBT

பொதுத் தேர்தலில் மாணவர்கள் வாக்களிக்க அரசு உயர்கல்வி கூடங்களுக்கு ஐந்து நாள் விடுப்பு

ஷா ஆலம், அக் 22- பதினைந்தாவது பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஏதுவாக அனைத்து அரசாங்க உயர்க்கல்விக் கூட மாணவர்களுக்கு செப்டம்பர் 17 முதல் 21 வரை ஐந்து நாட்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

உணர்வின் அடிப்படையிலும் 18 வயதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்தலில் வாக்களிப்பது உறுதி செய்யும் நோக்கிலும் இந்த விடுமுறை வழங்கப்படுவதாக உயர்கல்வித் துறை தலைமை இயக்குநர் டத்தோ பேராசிரியர் ஹூசாய்னி ஓமார் கூறினார்.

மாணவர்களுக்கு செப்டம்பர் 17 முதல் 21 வரை விடுமுறை வழங்கப்படுகிறது. அவர்கள் தங்கள் வசிப்பிட களுக்குச் சென்று வாக்களித்து விட்டு மீண்டும் உயர்கல்விக்கூடம் திரும்புவதற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பாக கடிதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது உறுதிப்படுத்திய அவர், இது குறித்து பத்திரிகை அறிக்கை விரைவில்  வெளியிடப்படும் என்று பேராசிரியர் ஹூசாய்னி தெரிவித்தார்.

பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 5ஆம் தேதியும் தொடக்க வாக்களிப்பு 15 ஆம் தேதியும் வாக்களிப்பு 19 ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


Pengarang :