ECONOMYSELANGOR

ஜாலான் சுங்கை புசு, கோம்பாக் 24 மணி நேரத்திற்குள் சாலை சீரமைக்கப்பட்டது 

ஷா ஆலம், அக்.27: கோம்பாக்கில் உள்ள ஜாலான் சுங்கை புசுவில் குடியிருப்பாளர்கள் ட்விட்டரில் புகார் தெரிவித்ததை அடுத்து 24 மணி நேரத்திற்குள் பழுதுகள்  சரி செய்யப்பட்டது.

மாநில சாலை பராமரிப்பு நிறுவனமான இன்ப்ராசெல் எஸ்டிஎன் பிஎச்டி நேற்று புகார்  கிடைக்க பெற்றதை  அடுத்து உடனடியாக சாலை சீரமைக்கும் பணி நடந்ததாகத் தெரிவித்துள்ளது.

சாலை சேதம் ஏற்பட்டால் #infrasel fence #namjalan #daerah உடன் தொடர்பு கொண்டு புகார்களை அளிக்குமாறு நிறுவனம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

செப்டம்பர் முழுவதும், கும்புலான் செமஸ்தா எஸ்டிஎன் பிஎச்டியின் (கேஎஸ்எஸ்பி) மற்றும் அதன் துணை சமூக ஊடகங்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து பெற்ற புகார்களின் அடிப்படையில்  பல மாநில சாலைகள் சரிசெய்யப்பட்டன.

சபாக் பெர்ணாமில் உள்ள ஜாலான் ஸ்ரீ கம்புட், பஞ்சாங் பெடேனா, ஜாலான் பாரிட் 6 சிகிஞ்சான், ஜாலான் சாவா பான் மற்றும் பத்து 53 ஜாலான் லாமா கோலா சிலாங்கூர் ஆகிய நான்கு இடங்களும் இதில் அடங்கும்.

உலு சிலாங்கூரில் ஜாலான் கெந்திங் மலை-பாத்தாங் காலி ஆகிய இரண்டு வழித்தடங்களும் சரி செய்யப்பட்டுள்ளது.

ஜாலான் ரஹிடின் 1, கம்போங் பாயா ஜாராஸ் டாலாம், ஷா ஆலம் மற்றும் ஜாலான் செலாயாங்-கெபோங், கோம்பாக் ஆகிய சாலைகளையும் அவசரச் சீரமைப்பு பணி உள்ளடக்கியது.

அந்தந்த பகுதி வாழ் சமூகங்கள், சேதமடைந்த சாலைகள் தொடர்பான சம்பவங்களை ட்விட்டர் மூலம் தெரிவிக்குமாறு பொதுமக்களை டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஊக்குவித்தார்.

அவரைப் பொறுத்தவரை, சிலாங்கூரில் சாலை சேதம் புகார் அளிக்கும் செயல் முறை தானியங்கி முறையில்  வடிகட்டப்பட்டு சரிபார்க்கப்பட்டு  மேல் நடவடிக்கைக்கு  அனுப்பப்படுவதாக  கூறியது.


Pengarang :