ACTIVITIES AND ADSMEDIA STATEMENTNATIONALSELANGOR

வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றுவீர்- சிங்கையில் வசிக்கும் மலேசியர்களுக்கு மாமன்னர் வலியுறுத்து

சிங்கப்பூர், அக்டோபர் 28-  சிங்கப்பூரில் வசிக்கும் மலேசியர்கள் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ள 15ஆவது பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடீன் அல்-முஸ்தாபா பில்லா ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் வாக்களிக்கும் உங்கள் பொறுப்பை நினைவூட்ட விரும்புகின்றேன். சற்று தொலைவில் இருந்தாலும் வாக்காளராகிய நீங்கள் உங்கள் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் சொன்னார்.

நேற்றிரவு ஷங்ரி-லா ஹோட்டலில் மலேசிய புலம் பெயர்ந்தவர்களுடன் இரவு உணவு விருந்து நிகழ்வில் பேசும் போது அல்-சுல்தான் அப்துல்லா இவ்வாறு கூறினார்.

மாட்சிமை தங்கிய பேரசியார் பெர்மைசூரி அகோங் துங்கு ஹாஜா அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா, அவரது மகள் செரி பாடுகா தெங்கு புத்ரி ராஜா தெங்கு புத்ரி அஃப்சான் அமினா ஹபிசதுல்லாவும் இவ்விருந்து நிகழ்வில் கலந்து கொண்டார்.

நாட்டின் 15வது பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்திருந்தது.

அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அஞ்சல் வாக்கு வகைகளுக்கான விண்ணப்பங்கள் பொதுத் தேர்தலுக்காக அக்டோபர் 10 முதல் திறக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், சிங்கப்பூரில் வசிக்கும் மலேசியர்களுக்கு அல்-சுல்தான் அப்துல்லாவும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். இரு நாடுகளும் கோவிட் -19 தொற்றுநோயை எதிர்கொள்ளும் போது பல்வேறு அம்சங்களில் ஒருவருக்கொருவர் உதவியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்

Pengarang :