Dato’ Menteri Besar Selangor Dato’ Seri Amirudin Shari berucap ketika Jelajah Selangor Penyayang daerah Sepang di Kota Warisan, Sepang pada 29 Oktober 2022. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூரில் 22 ஹராப்பான் சார்பில் 22 வேட்பாளர்கள் போட்டி- ஐவர் இந்தியர்கள்

ஷா ஆலம், நவ 1- வரும் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தின் 22 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடவுள்ள பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர்களின் பெயர்களை அக்கூட்டணி வெளியிட்டுள்ளது.

கெடிலான், அமானா மற்றும் ஜசெக, மூடா ஆகிய மூன்று கட்சிகளைப் பிரதிநிதித்து அவர்கள் இத்தேர்தலில் களம் காணவுள்ளனர். இத்தேர்தலில் கெஅடிலான் கட்சி மிக அதிகமாக அதாவது 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அமானா கட்சி ஆறு தொகுதிகளிலும் ஜசெக நான்கு  தொகுதிகளிலும் மூடா கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

பக்கத்தான் கூட்டணி சார்பில் சிலாங்கூர் மாநிலத்தில் ஐந்து  இந்திய வேட்பாளர்கள் களம் காண்கின்றன. அவர்களில் மூவர் பிகேஆர் கட்சியையும் இருவர் ஜசெகவையும் பிரதிநிதிக்கின்றனர்.

நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் ஹராப்பான் வேட்பாளர்கள் பட்டியல் வருமாறு-

சபாக் பெர்ணம்- சம்சுல் மாரிஃப் இஸ்மாயில் (அமானா)

சுங்கை பெசார்- சைபோல்யாசான் மாட் யூசுப் (பிகேஆர்.)

உலு சிலாங்கூர்- டாக்டர் சத்தியபிரகாஷ் நடராஜன் (பிகேஆர்.)

தஞ்சோங் காராங்- சித்தி ராஹ்யு பாஹ்ரின் (மூடா)

கோல சிலாங்கூர்- டாக்டர் ஜூல்கிப்ளி அகமது (அமானா)

செலாயாங்- வில்லியம் லியோங் (பிகேஆர்)

கோம்பாக்- டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி (பிகேஆர்)

அம்பாங்- ரோட்சியா இஸ்மாயில் (பிகேஆர்.)

பாண்டான்- ரபிஸி ரம்லி (பிகேஆர்)

உலு லங்காட்- முகமது சானி ஹம்சான்(அமானா)

பாங்கி- ஷியோர்ட்ஸான் ஜோஹான்( ஜசெக)

பூச்சோங்- இயோ பீ இன் ( ஜசெக)

சுபாங்- வோங் சென் (பிகேஆர்)

பெட்டாலிங் ஜெயா- லீ சியோன் சுங் (பிகேஆர்)

டாமன்சாரா- கோபிந்த் சிங் டியோ (ஜசெக)

சுங்கை பூலோ- ரமணன் ராமகிருஷ்ணன் (பிகேஆர்.)

ஷா ஆலம்- அஸ்லி யூசுப் (அமானா)

காப்பார்- அப்துல்லா சானி (பிகேஆர்)

கிள்ளான்- வீ.கணபதிராவ் (ஜசெக)

கோத்தா ராஜா- முகமது சாபு (அமானா)

கோல லங்காட்- மணிவண்ணன் கோவின் (பிகேஆர்)

சிப்பாங்- ராஜ் முன்னி@அய்மான் அதிரா (அமானா)


Pengarang :