KLANG, 12 Sept — Anggota Jabatan Bomba dan Penyelamat membuat pemantauan di kawasan berisiko tinggi banjir sebagai persediaan menghadapi monsun laut dan Fenomena Air Laut Pasang Besar bagi bulan September hingga November ini di Pengkalan Nelayan Tok Muda Kapar, Klang hari ini. –fotoBERNAMA (2022) HAK CIPTA TERPELIHARA
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

திங்கள் முதல் புதன் வரை கிள்ளானில் கடல் பெருக்கு அபாயம்

ஷா ஆலம், நவ 3- இம்மாதம் 7,8 மற்றும் 9ஆம் தேதிகளில் கடல் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கும்படி  கிள்ளான் வட்டார மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த இயற்கை சீற்றம் காரணமாக வெள்ளம்  மற்றும்  தடுப்பணைகள் உடையும் சாத்தியம் உள்ளதாக கிள்ளான் மாவட்ட மற்றும் நில அலுவலகம் கூறியது.

இக்காலக்கட்டத்தில் அலைகள் 5.3 மீட்டர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக அது தெரிவித்தது.

நடப்பு நிலவரம் குறித்து  விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்கும்படி கிள்ளான் வட்டார மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். வானிலை தொடர்பான சமீபத்திய நிலவரங்களை அறிந்திருப்பதோடு அரசு துறைகளின் உத்தரவுகளையும் மதித்து நடக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

கடல் பெருக்கு காலக்கட்டத்தில் செயல்படும் கிள்ளான் மாவட்ட மற்றும் நில அலுவலகத்தின் பேரிடர் நடவடிக்கை அறையை 03-33716700 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். 


Pengarang :