MEDIA STATEMENTPBT

வெள்ளத்தை எதிர் கொள்ள ஷா ஆலமின் 3 இடங்களில் நீர் இறைப்பு கருவிகள் பொருத்தப்படும்

 ஷா ஆலம், நவ 4- வெள்ளத்தை எதிர் கொள்வதற்காக மாநகரை சுற்றியுள்ள  மூன்று இடங்களில் நான்கு நீர் இறைப்பு பம்ப் கருவிகளை ஷா ஆலம் மாநகர் மன்றம் பொருத்தவுள்ளது. தாமான் ஸ்ரீ முடா, செக்சன் 25 (இரண்டு கருவிகள்), செக்சன் 13 எம்.பி.எஸ்.ஏ. பம்ப் நிலையம் (ஒரு கருவி), மற்றும் தாமான் மெஸ்ரா செக்சன் U1 (ஒரு  கருவி) ஆகியவையே அந்த  இடங்களாகும்.

கனமழையால் ஏற்படும் வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக இந்த பம்ப் கருவிகள் பொருத்தப்படுகின்றன மாநகர் மன்றம் அறிக்கை ஒன்றில் கூறியது. மேலும், ஷா ஆலம் வெள்ள செயல் திட்டத்தில் (சாசுட்) பரிந்துரைக்கப்பட்டுள்ள வெள்ளத் தணிப்புத் திட்டத்திற்கு தங்கள் தரப்பு ஒப்புதல் அளித்துள்ளதாகவும்  மாநகர் மன்றத்தின் அறிக்கை குறிப்பிட்டது.

தொடக்கத்தில் நான்கு திட்டங்கள் அதாவது பாம் ஹவுஸ் அளவை உயர்த்துதல் மற்றும் செக்சன் 13 மற்றும் செக்சன் U1 இல் உள்கட்டமைப்பை உள்ளடக்கிய  பணிகள் ஆகியவை தொடங்கப்படும். இரண்டாவது திட்டமானது பெர்சியாரன் அமானில் பாம்ப் ஹவுஸ் கட்டுவது மற்றும் தாமான் ஸ்ரீ முடா, செக்சன் 25 இல் உள்கட்டமைப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்வதாகும்.

மூன்றாவது திட்டம் ஜாலான் சக்ஸமா 25/29 மற்றும் ஜாலான் ஹிக்மத் 25/35 ஆகியவற்றில் பாம் ஹவுஸ்களை கட்டுவதாகும். நான்காவது திட்டம், செக்சன் 25இல் உள்கட்டமைப்பு தொடர்பான பணி மற்றும் கழிவு நீர் முறையை தரம் உயர்த்துவது மற்றும் கம்போங் புக்கிட் நாகா, செக்சன் 32  பகுதிகளுடன் தொடர்புடைய பணிகளாகும்.


Pengarang :