ECONOMYSELANGOR

சுங்கை பூலோவில் ஹராப்பான் வேட்பாளரின் பிரச்சாரத்திற்கு உதவ சிவராசா களம் இறங்கினார்

ஷா ஆலம், நவ 8: சுங்கை பூலோ தொகுதிக்கு அவர் வேட்பாளராக இல்லை என்றாலும், 15வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு உதவுகிறார் ஆர் சிவராசா.

பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டத்தோ ஆர் ரமணன், சிவராசாவுடன் சேர்ந்து, இங்குள்ள கம்போங் குபு காஜா, பாயா ஜாராஸில் நோய்வாய்ப் பட்டவரைச் சந்தித்தது  குறித்து தனது பிரச்சார இயந்திரங்களின் ஒரு சிறு காணொளியைப் பகிர்ந்துள்ளார்.

“முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா எப்பொழுதும் வழிகாட்டுதலை வழங்குவதற்கும், மதிப்புமிக்க அரசியல் அறிவு மற்றும் அனுபவத்தைப் பகிர்வதற்கும் நன்றி” என்று ரமணன் இன்று ட்விட்டரில் தெரிவித்தார்.

ரமணன் ஏழு முனைப் போட்டியில் வலுவான சவாலான முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடினை (பாரிசான்) எதிர்கொள்கிறார்.

முன்னதாக, புத்ராஜெயாவை நோக்கிய ஹராப்பான் பயண வெற்றியை உறுதி செய்வதற்காக, அவர் மீண்டும்  அத்தொகுதிக்கு பரிந்துரைக்கப்  படாத விவகாரத்தை நீடிக்க வேண்டாம் என்று சிவராசா வலியுறுத்தினார் என்பதை அனைவரும்  அறிவோம்.


Pengarang :