ALAM SEKITAR & CUACANATIONAL

சபா மற்றும் சிலாங்கூரில் இன்று மதியம் முழு சந்திர கிரகணத்தைக் காணும் வாய்ப்பு

ஷா ஆலம், நவ 8: இன்று பிற்பகல் 5 மணி முதல் சிலாங்கூர் முஃப்தி துறையின் பேஸ்புக் பக்கத்தில் முழு சந்திர கிரகணத்தை காணலாம்.

மாலை 6.58 மணிக்கு தொடங்கி கிழக்கு அடிவானத்தில் சந்திரன் உதிக்கத் தொடங்கும் போது இந்த நிகழ்வைக் காணலாம் என்று அரசு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பூமியின் அம்ப்ரா நிழலில் சந்திரன் செல்லும்போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

“அந்த சூழ்நிலையில் பூமியானது சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் ஒரு நேர் கோட்டில் இருக்கும்,” என்று அவர் இன்று பேஸ்புக் மூலம் கூறினார்.

இது சம்பந்தமாக, சபாக் பெர்ணமில் உள்ள சிலாங்கூர் ஆய்வகம் மற்றும் சபாவில் லகாட் டத்துவில் உள்ள தஞ்சோங் லாபியான் ஆகிய இரண்டு இடங்களில் ஃபலாக் பிரிவு மற்றும் சிலாங்கூர் முஃப்தி துறை ஆன்லைன் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.


Pengarang :