ECONOMYPENDIDIKANSELANGOR

தமிழ்ப்பள்ளிகள் வாழ, நாம் உரிமைகளை பெற நம் பிள்ளைகளின் சிறந்த கல்வியே உபாயம்

கோலாலம்பூர், நவ 12 – மலேசியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தோட்டங்கள் தோறும் தமிழ்ப்பள்ளிகள் அமைப்பதிலும் ஆலயங்கள் அமைப்பதில் நம் முன்னோர்கள் வெற்றி கண்டனர். அந்நாளில் சுமார் 1500 தமிழ்ப் பள்ளி பள்ளிகள் மட்டுமின்றி, மற்ற எல்லா மொழிப் பள்ளிகளை விட தமிழ்ப்பள்ளியே முன் தோன்றியதற்கான அடையாளத்தை கோலாலம்பூர் சன் பெங் தமிழ்ப்பள்ளி கொண்டுள்ளதாகவும், அது பினாங்கு பிரி ஆங்கிலப் பள்ளிக்கு முன் அடையப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் சுதந்திர மலேசியாவில் நமது பள்ளிகளின் அடிச்சுவட்டை அழிக்கும் விதமாக  ஆளும் பாரிசான் அரசாங்கம் நடந்து கொண்டதால், தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை  ஏறக்குறைய 520க்கு இறங்கியது.

ஆனால் 2007ம் ஆண்டு இந்திய சமுதாயத்தின் எழுச்சிக்கு பின், நாட்டில் சிலாங்கூர் உட்பட பல மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருந்திருந்தால் கடந்த 15 ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கையில் இன்னும் மோசமாக வீழ்ச்சி அடைந்திருக்கும்.

2008 ஆம் ஆண்டில் சிலாங்கூரில் பக்காத்தான் ராயாட் அரசாங்கம் எடுத்த முதல் நடவடிக்கை தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் ஒதுக்கீடு. தமிழ்ப்பள்ளிகளில் நிலவி வந்த  அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொண்டது.

அதில் மாணவர்களுக்கான மேசை நாற்காலிகள் முதல் கழிவறை, பள்ளி மண்டபம் வரையிலும், பள்ளிக்கு செல்லும் சாலை முதல் கட்டுமானங்கள் வரை அடங்கும்.

அடுத்த கட்டமாக நீண்ட காலமாக ரப்பர் பால் உலர்த்தும் அசாப் கொட்டகை போல் காட்சி தந்து வந்த தமிழ்ப்பள்ளிகளுக்கான புதிய தோற்றத்தை வழங்கும் முன் முயற்சியாக 2009ம் ஆண்டில் ஷா ஆலம் மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியின் கட்டிடத்தை, முழுக்க இந்தியர்களை கொண்டு எழுப்பியது மிக சிறிய செலவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அமரும் மண்டபத்துடன் கட்டியது, தமிழ்ப் பள்ளிகளின் புதிய வரலாறு ஆகும்.

அது தமிழ்ப்பள்ளி அமைப்புகள் பெற்றோர்கள் மற்றும் இந்திய அரசியல் கட்சிகளிடையே புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. எங்களாலும் கட்ட முடியும் என்று பல இந்திய குத்தகையாளர்கள் நாடு முழுவதும் தமிழ்ப்பள்ளிகளை கட்டும், மேம்படுத்தும் குத்தகைகளை அரசாங்கத்திடம் பெற்றனர்.

பல இடங்களில் புதிய கட்டடங்களும், தோற்றம் மேம்பாடுகளும் ஏற்பட்டது. பக்காத்தான் ஆளும் சிலாங்கூரில் நாம் எதை மேற்கொண்டாலும் அதற்கு போட்டியாக மத்திய அரசும், மற்ற மாநிலங்களும் செய்கின்றன.

அதன் அடிப்படையில் நாம் இங்கு பாலர் பள்ளிகளை ஆரம்பித்தோம் மத்திய அரசும் போட்டிக்கு பாலர் பள்ளிகளை வழங்கியது.

நாம் 30 லட்சம் வெள்ளிகளில் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி மேம்பாட்டு நிதியை ஆரம்பித்தோம், இன்றைய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அதனை 50 லட்சமாக உயர்த்தி வழங்கி வருகிறார்.

பக்காத்தான் மாநிலங்களில் வழங்கப்படும் இந்த மானியம் பாரிசான் ஆளும் மாநிலங்களிலும் வழங்கப்பட வேண்டும். அப்படி கொடுக்காத மாநிலங்களின் ஆட்சியை மாற்ற இந்தியர்கள் முன் வர வேண்டும்.

சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி அடுத்து எடுத்து வைத்துள்ள முன் முயற்சி மாணவர் தங்கும் விடுதி. அது எல்லா மாநிலங்களிலும் தோற்றுவிக்கப்பட வேண்டும்.

சிலாங்கூர் மாநில 98 தமிழ்ப்பள்ளிகளுக்கான பக்காத்தான் ஹராப்பான் மாநில அரசு வழங்கும் ஆண்டு மானியம் குறித்த பட்டியலை மக்கள் பார்த்து தெரிந்து கொள்ள கீழ் காணும் பட்டியலை இணைத்துள்ளோம்.

எண் தமிழ் பள்ளி பெறுநரின் பட்டியல் பள்ளி குறியீடு பகுதி குறியீடு தொகை
1 தேசிய வகை துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி SJKT 46 N31 சுபாங் ஜெயா 50,000.00
2 தேசிய வகை சீபீல்டு தோட்ட தமிழ்ப்பள்ளி SJKT60 N31 சுபாங் ஜெயா 35,000.00
3 தேசிய வகை கிளன்மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 55 N32 ஸ்ரீ செத்தியா 50,000.00
4 தேசிய வகை விவேகானந்தா தமிழ்ப்பள்ளி, பெட்டாலிங் ஜெயா SJKT 37 N34 புக்கிட் காசிங் 70,000.00
5 தேசிய வகை ஆர்.ஆர்.ஐ தமிழ்ப்பள்ளி SJKT 40 N39 கோத்தா டமான்சாரா 55,000.00
6 தேசிய வகை ஈபோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 20 N41 பத்து தீகா 50,000.00
7 தேசிய வகை சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி SJKT 68 N41 பத்து தீகா 80,000.00
8 தேசிய வகை பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளி SJKT 101 N25 காஜாங் 50,000.00
9 தேசிய வகை பாங்கி தமிழ்ப்பள்ளி SJKT 92 N26 சுங்கை ரமால் 60,000.00
10 தேசிய வகை வெஸ்ட் கண்ட்ரி (கிழக்கு) தமிழ்ப்பள்ளி SJKT 96 N26 சுங்கை ரமால் 30,000.00
11 தேசிய வகை மேற்குத் தமிழ்ப்பள்ளி கேரித்தீவு SJKT 48 N51 சிஜங்காங் 65,000.00
12 தேசிய வகை சுங்கை சீடு தமிழ்ப்பள்ளி SJKT 101 N52 பந்திங் 40,000.00
13 தேசிய வகை சுங்கை மங்கிஸ் தமிழ்ப்பள்ளி SJKT 32 N52 பந்திங் 40,000.00
14 தேசிய வகை சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி SJKT 8 N53 பந்திங் 40,000.00
15 தேசிய வகை காந்திஜி தமிழ்ப்பள்ளி SJKT 57 N09 சுங்கை பூரோங் 30,000.00
16 தேசிய வகை மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 95 N09 பெர்மாதாங் 25,000.00
17 தேசிய வகை ராஜா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 26 N09 பெர்மாதாங் 40,000.00
18 தேசிய வகை சுங்கை திங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 61 N09 பெர்மாதாங் 40,000.00
19 தேசிய வகை ரிவர்சைடு தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 39 N09 பெர்மாதாங் 40,000.00
20 தேசிய வகை கோலா சிலாங்கூர் தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 72 N10 புக்கிட் மெலாவத்தி 50,000.00
21 தேசிய வகை பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி SJKT 82 N11 ஈஜோக் 50,000.00
22 தேசிய வகை துவான் மீ தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 81 N12 ஜெராம் 40,000.00
23 தேசிய வகை தாமான் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளி SJKT 69 N55 டிங்கில் 65,000.00
24 தேசிய வகை டிங்கில் தமிழ்ப்பள்ளி SJKT 56 N55 டிங்கில் 65,000.00
25 தேசிய வகை சிப்பாங் தமிழ்ப்பள்ளி SJKT 35 N56 சுங்கை பிலேக் 70,000.00
26 தேசிய வகை அம்பாங் தமிழ்ப்பள்ளி SJKT 58 N19 புக்கிட் அந்தாராபங்சா 50,000.00
27 தேசிய வகை ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 31 N24 செமினி 70,000.00
28 தேசிய வகை டொமினியன் தமிழ்ப்பள்ளி SJKT 29 N24 செமினி 20,000.00
29 தேசிய வகை வெஸ்ட் கண்ட்ரி (மேற்கு) தமிழ்ப்பள்ளி SJKT 70 N55 டிங்கில் 40,000.00
30 தேசிய வகை அம்பர் தெனாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 44 N55 டிங்கில் 55,000.00
தேசிய வகை துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி
31 தேசிய வகை பண்டார் பாரு சாலாக் திங்கி தமிழ்ப்பள்ளி SJKT 62 N56 சுங்கை பிலேக் 50,000.00
32 தேசிய வகை பியூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 45 N56 சுங்கை பிலேக் 20,000.00
33 தேசிய வகை புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 16 N56 சுங்கை பிலேக் 50,000.00
34 தேசிய வகை பத்து ஆராங் தமிழ்ப்பள்ளி SJKT 19 N13 குவாங் 60,000.00
35 தேசிய வகை ஐக்கோம் தமிழ்ப்பள்ளி SJKT 67 N50 கோத்தா கெமுனிங் 50,000.00
36 தேசிய வகை நோர்த் ஹம்மோக் தமிழ்ப்பள்ளி SJKT 98 N40 கோத்தா அங்கெரிக் 50,000.00
37 தேசிய வகை மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 18 N40 கோத்தா அங்கெரிக் 50,000.00
38 தேசிய வகை கம்போங் பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 27 N09 பெர்மாதாங் 45,000.00
39 தேசிய வகை சுங்கை திராப் தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 25 N09 பெர்மாதாங் 40,000.00
40 தேசிய வகை ஹோப்புள் தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 28 N09 பெர்மாதாங் 20,000.00
41 தேசிய வகை வாகீசர் தமிழ்ப்பள்ளி SJKT 89 N10 புக்கிட் மெலாவத்தி 50,000.00
42 தேசிய வகை செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 30 N24 செமினி 70,000.00
43 தேசிய வகை காஜாங் தமிழ்ப்பள்ளி SJKT 90 N25 காஜாங் 80,000.00
44 தேசிய வகை தெற்குக் கேரித்தீவு தமிழ்ப்பள்ளி SJKT 22 N51 சிஜங்காங் 55,000.00
45 தேசிய வகை தெலுக் பங்லிமா காராங் தமிழ்ப்பள்ளி SJKT 11 N51 சிஜங்காங் 75,000.00
46 தேசிய வகை கேரித்தீவு கிழக்குத் தமிழ்ப்பள்ளி SJKT 23 N51 சிஜங்காங் 40,000.00
47 தேசிய வகை தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி SJKT 9 N52 பந்திங் 60,000.00
48 தேசிய வகை ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி SJKT 45 N52 பந்திங் 40,000.00
49 தேசிய வகை ஜுக்ரா தமிழ்ப்பள்ளி SJKT 5 N53 மோரிப் 55,000.00
50 தேசிய வகை சுங்கை புவாயா தமிழ்ப்பள்ளி SJKT 7 N53 மோரிப் 40,000.00
51 தேசிய வகை காடோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 14 N54 தஞ்சோங் சிப்பாட் 40,000.00
52 தேசிய வகை தெலுக் மெர்பாவ் தமிழ்ப்பள்ளி SJKT 36 N54 தஞ்சோங் சிப்பாட் 50,000.00
53 தேசிய வகை தும்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 15 N54 தஞ்சோங் சிப்பாட் 50,000.00
54 தேசிய வகை சிலாங்கூர் ரிவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 77 N10 புக்கிட் மெலாவத்தி 50,000.00
55 தேசிய வகை சுங்கை ரம்பை தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 71 N10 புக்கிட் மெலாவத்தி 40,000.00
56 தேசிய வகை பிரவுண்ஸ்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 12 N10 புக்கிட் மெலாவத்தி 40,000.00
57 தேசிய வகை புக்கிட் ரோத்தான் தமிழ்ப்பள்ளி SJKT 84 N10 ஈஜோக் 40,000.00
58 தேசிய வகை கோல்பீல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 78 N11 ஈஜோக் 40,000.00
59 தேசிய வகை புக்கிட் செராக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 79 N12 ஜெராம் 40,000.00
தேசிய வகை கோல்பீல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி
60 தேசிய வகை சுங்கை பூலோ தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 83 N10 புக்கிட் மெலாவத்தி 40,000.00
61 தேசிய வகை ஹைலண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 75 N48 செந்தோசா 80,000.00
62 தேசிய வகை பத்து அம்பாட் தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 50 N48 செந்தோசா 50,000.00
63 தேசிய வகை தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளி SJKT 100 N48 செந்தோசா 60,000.00
64 தேசிய வகை சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி SJKT 3 N49 சுங்கை காண்டீஸ் 100,000.00
65 தேசிய வகை பத்து எமரால்டு தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 74 N50 கோத்தா கெமுனிங் 80,000.00
66 தேசிய வகை பெர்சியாரான் ராஜா மூடா மூசா தமிழ்ப்பள்ளி SJKT 47 N46 போர்ட் கிள்ளான் 40,000.00
67 தேசிய வகை வல்லம்புரோசா தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 43 N42 மேரு 50,000.00
68 தேசிய வகை குவாங் தமிழ்ப்பள்ளி SJKT 65 N13 குவாங் 50,000.00
69 தேசிய வகை இராசாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 54 N40 கோத்தா அங்கெரிக் 50,000.00
70 தேசிய வகை காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி, பூச்சோங் SJKT 59 N30 கின்ராரா 65,000.00
71 தேசிய வகை சீப்போர்ட் தமிழ்ப்பள்ளி SJKT 73 N32 ஸ்ரீ செத்தியா 50,000.00
72 தேசிய வகை எப்பிங்காம் தமிழ்ப்பள்ளி SJKT 86 N36 பண்டார் உத்தாமா 50,000.00
73 தேசிய வகை சரஸ்வதி தமிழ்ப்பள்ளி, சுங்கை பூலோ SJKT 97 N37 புக்கிட் லஞ்சான் 50,000.00
74 தேசிய வகை மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி, காப்பார் SJKT 19 N42 மேரு 60,000.00
75 தேசிய வகை ஜாலான் அக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 41 N43 செமெந்தா 50,000.00
76 தேசிய வகை பிராப்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 64 N43 செமெந்தா 40,000.00
77 தேசிய வகை புக்கிட் ராஜா தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 63 N45 BANDAR BARU KLANG 40,000.00
78 தேசிய வகை ஜாலான் தெப்பி சுங்கை தமிழ்ப்பள்ளி SJKT 85 N45 பண்டார் பாரு கிள்ளான் 50,000.00
79 தேசிய வகை ஜாலான் மேரு தமிழ்ப்பள்ளி SJKT 66 N45 பண்டார் பாரு கிள்ளான் 60,000.00
80 தேசிய வகை புக்கிட் பெருந்தோங் தமிழ்ப்பள்ளி SJKT 88 N07 பாத்தாங் காலி 60,000.00
81 தேசிய வகை பத்தாங்காலி தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 1 N07 பாத்தாங் காலி 50,000.00
82 தேசிய வகை புக்கிட் டாரா தமிழ்ப்பள்ளி SJKT 52 N13 குவாங் 60,000.00
83 தேசிய வகை ரவாங் தமிழ்ப்பள்ளி SJKT 2 N14 ரவாங் 85,000.00
84 தேசிய வகை பத்து கேவ்ஸ் தமிழ்ப்பள்ளி SJKT 42 N16 சுங்கை துவா 50,000.00
85 தேசிய வகை தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி SJKT 17 N18 உலு கிள்ளான் 65,000.00
86 தேசிய வகை செர்டாங் தமிழ்ப்பள்ளி SJKT 38 N29 ஸ்ரீ செர்டாங் 65,000.00
87 தேசிய வகை பூச்சோங் தமிழ்ப்பள்ளி SJKT 21 N29 ஸ்ரீ செர்டாங் 65,000.00
88 தேசிய வகை கின்ராரா தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 76 N30 கின்ராரா 65,000.00
தேசிய வகை தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளி
89 தேசிய வகை சுங்கை பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 99 N01 சுங்கை ஆயர் தாவார் 40,000.00
90 தேசிய வகை சபாக் பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 87 N02 சபாக் 50,000.00
91 தேசிய வகை எஸ்கோட் தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 51 N05 உலு பெர்ணம் 40,000.00
92 தேசிய வகை காலும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 80 N05 உலு பெர்ணம் 50,000.00
93 தேசிய வகை சங்காட் ஆசா தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 24 N05 உலு பெர்ணம் 50,000.00
94 தேசிய வகை லீமா பிளாஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 53 N05 உலு பெர்ணம் 15,000.00
 

95

தேசிய வகை கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி  

SJKT 53

 

N06 கோல குபு பாரு

 

80,000.00

96 தேசிய வகை நைகல் கார்டினர் தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 34 N06 கோல குபு பாரு 40,000.00
97 தேசிய வகை கோல குபு பாரு தமிழ்ப்பள்ளி SJKT 13 N06 கோல குபு பாரு 50,000.00
98 தேசிய வகை சுங்கை சோ தோட்டத் தமிழ்ப்பள்ளி SJKT 6 N07 பாத்தாங் காலி 50,000.00
மொத்த தொகை 5,000,000.00

Pengarang :