ECONOMYSELANGOR

நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மைசலாம் திட்டம் விரிவுபடுத்தப்படும்

கோலா சிலாங்கூர், நவம்பர் 15: பக்காத்தான் ஹராப்பான் மைசலாம் பாதுகாப்பு திட்டம் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு (எம்40) விரிவுபடுத்துவது அனைத்து தரப்பினருக்கும் சம உரிமையை வழங்குகிறது.

63 வயதான அப்துல் வஹாப் ஜோஹாரி, குழுவிற்கும் தேவைப்படும் இலவச சுகாதார பாதுகாப்பு தக்காபுல் திட்ட முன்முயற்சியை வழங்குவதற்கான கூட்டணியின் விருப்பத்தை வரவேற்றார்.

அப்துல் வஹாப் ஜோஹாரி, 63

 “இந்தத் திட்டம் குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு (பி40) மட்டுமே என்பதை மாற்றி எம் 40க்கும் அவர்கள் வழங்க விரும்புகிறார்கள் என்பது மிகவும் நல்லது இதனை வரவேற்பதாக கூறினார்.

“மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நன்மைகள் எதுவாக இருந்தாலும் சமமாக இருக்க வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக, இப்போது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், 57 வயதான ஆசியா முகமது ஸஹர், சமூக சுகாதார பாதுகாப்புத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியற்றவராக இருந்தால், இந்தச் சலுகையை பயன்படுத்திக் கொள்வார்.

ஆசியா முகமது ஸஹர், 57

 “எனது உறவினர்கள் பலர் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து தகுதி பெற்றனர் ஆனால் அது எனக்கு நேர்மாறானது. வீட்டு வருமானம் என்னை தகுதியற்றதாக ஆக்குகிறது.

“பல எம் 40 குழுவினர் கடுமையான நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு நிதிப் பிரச்சினைகளை எதிர்கொள்வது கருத்தில் கொண்டு, ஹராப்பான் இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றால் அதன் வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

உடல்நிலை சரியில்லாமல் போனால், சிகிச்சைக்கான செலவு அதிகம் என்பதால், அதை  மக்களே செலுத்துவது சிரமமாக இருப்பதால், இத்திட்டம் சிறந்தது,” என்றார்.


Pengarang :