ECONOMYSELANGOR

பல்வேறு குற்றங்களுக்காக 36 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை- எம்.பி.கே.எல். தகவல்

ஷா ஆலம், நவ 17- கோல லங்காட் நகராண்மை கழகம் 1976ஆம் ஆண்டு துணைச் சட்டங்கள் மற்றும் வடிகால், சாலை, கட்டிட சட்டத்தின் கீழ் (சட்டம் 133) 36 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுத்துள்ளது.

சம்பந்தப்பட்ட அந்த 36 பேருக்கு எதிராக தெலுக் டத்தோ நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட்டதாக கோல லங்காட் நகராண்மைக் கழகம் (எம்.பி.கே.எல்.)  தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

அவர்களில் எண்மர் நீதிமன்றத்திற்கு வரத் தவறியதைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டதாக அது மேலும் கூறியது.

நகராண்மைக் கழக சட்ட விதிகளின் கீழ் புரியப்பட்ட குற்றங்கள் தொடர்பில் மேலும் எண்மர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. கோல லங்காட் நகராண்மைக் கழக லைசென்ஸ் இன்றி ஹோட்டலை நடத்திய 40 வயது நபரும் அவர்களில் ஒருவராவார் என்று அது குறிப்பிட்டது.

அந்நபருக்கு எதிராக 2007ஆம் ஆண்டு கோல லங்காட் நகராண்மைக் கழக ஹோட்டல் துணைச் சட்டத்தின் 3(1)வது பிரிவின் கீழ் 600 வெள்ளி அபராதம், அபராதம் செலுத்த தவறினால் ஒரு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.


Pengarang :