ECONOMY

போர்ட்டிக்சனில் ஹராப்பான் சுனாமியில் மூழ்கியது மஇகா 

ஷா ஆலம், நவ 19- போர்ட்டிக்சன் தொகுதியில் ஹராப்பான் சார்பில் போட்டியிட்ட நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் பெரும்பான்மை வாக்குகளில் அத்தொகுதியை கைப்பற்றியுள்ளார்.

டத்தோஸ்ரீ ஹருணுக்கு 38,000 த்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்த வேளையில் அவரை எதிர்த்து தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட மஇகா வேட்பாளரான பி. கமலநாதன் 18,827 வாக்குகளைப் பெற்றார்.

இந்த தொகுதியில் கடந்த முறை  ஹராப்பான் கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :