ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

ம.இ.கா தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன்,ஏழு முனை போட்டியில் பி கே ஆரின்  எஸ் கேசவனிடம் தோல்வி

ஷா ஆலம் 20 நவ;- சுங்கை சிப்புட்டில், ம.இ.காவின்  தேசிய தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன்,ஏழு முனை போட்டியை சந்தித்தார். ஆனால்  19,791 ஓட்டுகளை மட்டும்  பெற்று   பி கே ஆரின்  எஸ் கேசவனிடமிருந்து தொகுதியை  கைப்பற்றுவதில்  தோல்வியடைந்தார். இதில் ஹராப்பானின் எஸ் கேசவனுக்கு 21637 ஓட்டுகள்  கிடைத்தது.

ம.இ.கா தேசிய தலைவர் விக்னேஸ்வரன் சுங்கை சிப்புட் தொகுதியில்  கண்டது  இரண்டாவது தேர்தல் தோல்வியாகும்.  கடந்த 2008ம் ஆண்டு கோத்தா ராஜா தொகுதியில் தோல்விக் கண்ட இவர் சில காலம் மேலவை உறுப்பினராகவும், அமைச்சர் அந்தஸ்து கொண்ட தெற்காசியாவுக்கான பிரதமரின் சிறப்பு பிரதிநிதியாகவும் இருந்துள்ளார்.

கடந்த 2004 ம் ஆண்டு  கோத்தா ராஜா  நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பின்  இளைஞர் விளையாட்டுத் துறையின்  செயலாளராக பதவி வகித்தவர்  2008ம் ஆண்டு கோத்தா ராஜா தொகுதியில் தோல்வி கண்டார்.

அதன் பின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும், பிறகு  மேலவை தலைவராகவும் பதவி வகித்த அவர், கடந்த பல மாதங்களாக சுங்கை சிப்புட் தொகுதியை  வெற்றி பெற பல்வேறு வாக்குறுதிகளை  வழங்கியதுடன்  சுங்கை சிப்புட் மக்களுக்கு பல திட்டங்களை  மேற்கொண்டு வந்தார்.

ஆனால், ம.இ.கா தலைவர்களின் பல செயல்கள், உரைகளால் புண் பட்டுள்ள இந்தியர்கள்,  மித்ரா போன்ற அரசு அமைப்புகளின் வழி  இந்திய சமுதாயத்திற்கு வர வேண்டிய நிதி  உதவிகளை இடை மறித்து ம.இ.கா தலைவர்கள்  எடுத்துக் கொண்டதை  இந்திய சமுதாயத்தால்  ஏற்றுக்கொள்ள  முடியவில்லை என்பதை  காட்டுகிறது,

கடந்த கால தலைவர்களின்  துரோக செயல்களுக்கு,  ம இ.காவை  இந்தியர்கள்  இன்னும் மன்னிக்கவில்லை என்பதை  மறந்து, அக்கட்சியின்  தலைவர்கள்  சமுதாய சூரையாடல்களை தொடர்ந்து  மேற்கொண்டு வந்தால்  தோல்வி மேல் தோல்வியே அக் கட்சி சந்திக்க  நேரிடும் என்பது வாக்காளர்கள் கருத்து..
படத்திற்கு  நன்றி.


Pengarang :