ECONOMYNATIONAL

பொதுத் தேர்தலுக்கு பிந்தைய சூழலை எதிர்கொள்ள போலீஸ் தயார்- ஐ.ஜி.பி. கூறுகிறார்

கோலாலம்பூர், நவ 20- நாட்டில் அமைதி மற்றும் பொது ஒழுங்கை உறுதி செய்வதற்காக பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்கு பிந்தைய சூழல் மற்றும் புதிய அரசாங்கம் உருவாக்கும் காலக்கட்டத்தை எதிர்கொள்ள அரச மலேசிய போலீஸ் படை தயாராக உள்ளது.

பொதுத் தேர்தலுக்கு பிந்தைய காலக்கட்டத்தில் பாதுகாப்புக்கும் பொது அமைதிக்கும் ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அனைத்து தரப்பினருக்கும் நினைவுறுத்தப்படுவதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா கூறினார்.

நாட்டின் பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காவல்துறையின் அனைத்து பிரிவுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.

நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டலை ஏற்படுத்தும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

பதினைந்தாவது பொதுத் தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.  

 


Pengarang :