ECONOMYNATIONAL

ஹராப்பான் பாடாங் செராய் வேட்பாளராக, கெடா மாநில கெஅடிலான் செயலாளரின் பெயரை குறிப்பிட்டுள்ளது

கூலிம், நவ 24 – 15வது பொதுத் தேர்தலில் பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதிக்கு பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக கெடா பார்ட்டி கெஅடிலான் ரக்யாட் (கெஅடிலான்) செயலாளர் டாக்டர் முகமது சோபி ரசாக் பெயர் குறிப்பிடப் பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை பார்ட்டி அமானா நெகாரா (அமானா) துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ சலாவுடின் அயூப் வெளியிட்டார். இந்த அறிவிப்பில் கெடா ஹராப்பான் தலைவர் டத்தோ மஹ்போஸ் ஓமர் உட்பட பல மாநில அளவிலான ஹராப்பான் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

நவம்பர் 16 அன்று மாரடைப்பு மற்றும் உடல்நலக் கோளாறுகளால் மரணமடைந்த ஹராப்பானின் முந்தைய வேட்பாளரான 69 வயதான எம். கருப்பையா என்பவருக்கு பதில் வழக்கறிஞரான முகமது சோபி (47) நியமிக்கப்பட்டார்.

முகமட் சோபி முன்பு 14வது பொதுத் தேர்தலில் கோலா கெட்டில் மாநிலத் தொகுதிக்கு போட்டியிட்டார்.

இதற்கிடையில், ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை (எம்.பி.க்கள்) அதிகரிக்க, பாடாங் செராய் நாடாளுமன்ற மாநிலத் தொகுதிக்கான வெற்றி  மிகவும் முக்கியமானது என்று சலாவுடின் தனது உரையில் தெரிவித்தார்.

“முகமது சோபி ஒரு இளம் வேட்பாளர் இருப்பினும் தலைமைத்துவ தகுதிகள், திறமைகள் மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில், அதை மறுக்க முடியாது, மேலும் அவர் ஹராப்பான் வெற்றிப் பதாகையை பாடாங் செராயில் வாக்குப்பதிவு நாளில் எடுத்துச் செல்ல முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று அவர் கூறினார்.

கருப்பையாவின் மரணத்தைத் தொடர்ந்து, பாடாங் செராய் நாடாளுமன்றத்திற்கான 15வது பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒத்திவைக்கப் பட்டதாக தேர்தல் ஆணையம் முன்பு அறிவித்தது. தேர்தல் ஆணையம் டிசம்பர் 7 ஆம் தேதியை வாக்குப்பதிவு நாளாகவும் அதே நேரத்தில் முன்கூட்டியே வாக்குப்பதிவு டிசம்பர் 3 ஆம் தேதி நிர்ணயித்தது.


Pengarang :