ALAM SEKITAR & CUACA

நாடு முழுதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

ஷா ஆலம், நவ 25; நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நேற்று காலை மணி 8.05 நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 899 இருந்த நிலையில் தற்போது 848ஆக குறைந்துள்ளது. அவர்கள் அனைவரும் 12 தற்காலிக தங்கும் மையங்களில் தங்கியுள்ளனர்.

ஜெ.கெ.எம்யின் (JKM) பேரிடர் தகவல் இணையத்தளத்தின் படி சிலாங்கூரில் பாதிக்கப்பட்ட 105 குடும்பங்கள் இன்னும் 4 தற்காலிக தங்கும் மையங்களில் தங்கியுள்ளனர். அதே சமயத்தில் பேராக்கில் 135 குடும்பங்கள் ஏழு மையங்களில் ஜொகூரில் 12 குடும்பங்கள் ஒரே மையத்திலும் தங்கியுள்ளனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு (நட்மா) மூலம் சிலாங்கூர், கெடா, பேராக், திராங்கானு, பகாங், சபா மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களில் பல இடங்களில் காலை மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிற்பகலில் சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, பெர்லிஸ், பேராக், கெடா, பினாங்கு, கிளந்தான், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா, சரவாக் மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து மாலை நேரத்தில் பேராக், சரவாக், நெகிரி செம்பிலான் மற்றும் ஜொகூர் ஆகிய இடங்களில் மழை பெய்யும் என்றும் பெர்லிஸ், கெடா, பினாங்கு, சபா, கிளந்தான், திரங்கானு மற்றும் பகாங் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


Pengarang :