ECONOMYSELANGOR

சிலாங்கூர் தொடர்ந்து மலேசிய பொருளாதாரத்தில் 24.8 சதவிகிதம் பங்களிப்புடன் முன்னணியில்

ஷா ஆலம், 25 நவம்பர்: சிலாங்கூர் தொடர்ந்து மலேசிய பொருளாதாரத்தில் 24.8 சதவிகிதம் பங்களிப்புடன் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பாளராக உள்ளது.

2020 இல் RM327.1 பில்லியனுடன் ஒப்பிடும்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) RM343.5 பில்லியனைக் கொண்டு பிற மாநிலங்களை பின் தள்ளி சிலாங்கூர் முன்னிலையில் உள்ளது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

“2020 இல் -5.2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2021 இல் 5.0 சதவீதமாக மதிப்பு அதிகரித்தது, அதனை தேசிய வளர்ச்சி அளவு 3.1 சதவீதத்தை ஒப்பிட்டு, மாநிலத்தின் வளர்ச்சி தேசிய நிலை வளர்ச்சியை விட முன்னேறிய நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டினார் ,”  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி.

சேவைத் துறை 59.5 சதவீதம், உற்பத்தி (31.4 சதவீதம்), கட்டுமானம் (5.1 சதவீதம்), விவசாயம் (1.5 சதவீதம்) மற்றும் சுரங்கம் (0.2 சதவீதம்) முக்கிய பங்களிப்பாக உள்ளது என்றார்.

முதல் சிலாங்கூர் திட்டம் திறமையானது மற்றும் நிர்வாகத்தின் திறன் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற ஊதியத்துடன் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான நம்பிக்கையை அளிக்கக்கூடியது என்றும் அமிருடின் நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :