ECONOMYSELANGOR

சிலாங்கூர் பென்யாயாங் திட்ட அமலாக்கத்திற்காக சட்டமன்றங்களுக்கு வெ.500.000 மானியம்

ஷா ஆலம், நவ 25- சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் அடுத்தாண்டிலும் தொடர்வதை உறுதி செய்வதற்கு மாநில அரசு அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் தலா 500,000 வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

தொகுதிகளில் பராமரிப்பு பணிகள், அடிப்படை வசதிகளை அமைப்பது மற்றும் அரசாங்க பொது வசதிகளை தரம் உயர்த்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள இந்த மானியம் வழங்கப்படுவதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த நோக்கத்திற்காக மாநில அரசு 2 கோடியே 80 லட்சம்  வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக கூறிய அவர், அந்தந்த வட்டாரங்களில் சிறிய அளவிலான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் வட்டார பொருளாதார நடவடிக்கைகளுக்கு புத்துயிரூட்ட முடியும் என குறிப்பிட்டார்.

இவ்வாண்டில் சிலாங்கூர் பென்யாயாங் திட்டங்கள் மூலம் மாநிலத்திலுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில்  3 கோடியே 50 லட்சம் வெள்ளி செலவில் மொத்தம் 664 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாக 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் சொன்னார்.


Pengarang :