ALAM SEKITAR & CUACA

தடுப்பு சரிவால் புக்கிட் மெலாவத்தி சுற்றுலா தலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஷா ஆலம், நவ 26; வரலாற்று சிறப்புமிக்க புக்கிட் மெலாவதி நுழைவாயில் உள்ள தடுப்புகள் தொடர் மழையின் காரணமாக நேற்று இடிந்து விழுந்தன.

காலை மணி 10 அளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கோலா சிலாங்கூர் மாவட்ட குடிமைத் தற்காப்புப் படை () தனது முகநூலின் மூலம் தெரிவித்துள்ளது. தகவல் தெரிந்தவுடன் நான்கு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

அந்த நிலச்சரிவு கிட்டத்தட்ட நுழையும் மற்றும் வெளியேறும் இடங்களை முழுவதுமாக மூடி விட்டதாக இப்பதிவின் மூலம் தெரிய வருகிறது.

இச்சம்பவம் அதிகாலை நடந்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீயணைப்புத் துறை மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து அப்பகுதியை சுத்தம் செய்து, இடிந்து விழுந்த தடுப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் காரணமாக நேற்று முதல் இன்று வரை அச்சுற்றுலா மையம் மூடப்பட்டது.


Pengarang :