HEALTH

புதிய வாரத்தில் கோவிட்-19 இன் எண்ணிக்கை குறைந்துள்ளது

கோலாலம்பூர், நவ 29: 47 வது தொற்றுநோய் வாரத்தில் (20 முதல் 26 நவம்பர் வரை) நாட்டில் கோவிட்-19யின் புதியச் சம்பவங்கள் 2.5 சதவீதம் குறைந்து 18,606 எண்ணிக்கையில் உள்ளது. இதற்கு முந்தைய தொற்றுநோய் வாரத்தில் 19,083 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளூர் சம்பவங்களின் எண்ணிக்கை 19,068 எண்ணிக்கையிலிருந்து 2.6 சதவீதம் குறைந்து 18,581 சம்பவங்களாக உள்ளன. இருப்பினும் வெளிநாடுகளிலிருந்து வந்த  கோவிட்-19 தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது அதாவது 15 சம்பவங்களிலிருந்து 25 சம்பவங்களாக பதிவாகியுள்ளன.

அதே வாரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19 சதவீதம் குறைந்துள்ளது (23,089 வழக்குகள் 18,699 வழக்குகளாக குறைந்துள்ளது)  மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை 47 இல் இருந்து 55 ஆக அதிகரித்துள்ளது (17 சதவீதம் அதிகரிப்பு).

47வது தொற்றுநோய் வாரம் 46 வது தொற்றுநோய் வாரத்துடன் ஒப்பிடுகையில் 23,089 சம்பவங்களிலிருந்து 18,699ஆகக் குறைந்துள்ளன அதாவது 2.8 சதவீதம் குறைந்துள்ளது.

அவரது கூற்றுப்படி, 4வது தொற்றுநோய் வாரம் தொடங்கி 47வது தொற்றுநோய் வாரம் வரை புதிய கோவிட்-19 தொற்றுகள் 4,984,272ஆகப் பதிவாகியுள்ளன. அதே சமயத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,920,983ஆகவும், இறப்புகளின் எண்ணிக்கை 36,648ஆகவும் உள்ளன.

 மருத்துவமனைகள் மற்றும் ஆபத்து குறைந்த கோவிட்-19 சிகிச்சை மையங்கள் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு 100,000 பேர்களுக்கும் 5.1 சதவீதம் அதிகரித்துள்ளது என டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

முதல் வகை (அறிகுறிகள் இல்லை) மற்றும் இரண்டாம் வகை (அறிகுறிகளுடன்) மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 3.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், மூன்றாம் நிலை (இருதய வீக்கம்), நான்காம் வகை (ஆக்சிஜன் உதவி) மற்றும் ஐந்தாம் வகை (சுவாசக் கருவிகள் உதவி) ஆகிய பிரிவுகள் 3.4 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

– பெர்னாமா


Pengarang :