ECONOMY

ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் 20க்கும் மேற்பட்ட அற்புதமான நடவடிக்கைகள்

ஷா ஆலம், நவ 29 – உலு கிள்ளானில் டிசம்பர் 3 முதல் 4 வரை திட்டமிடப்பட்டுள்ள ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் (ஜேஎஸ்பி) ரோட்ஷோ நிகழ்வில் 20க்கும் மேற்பட்ட அற்புதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பெர்சியாரான் அஸ்-சலாம் புக்கிட் செந்தோசாவில் நடைபெற்றும் இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய விளையாட்டுகள், கடைகள்,  “பாதெக்“ ஓவியம் தீட்டுதல் , பெச்சா (beca) சவாரி மற்றும் உணவு வண்டிகள் ஆகியவை இடம்பெறும் என உலு சிலாங்கூர் நில மற்றும் மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

மாநில அரசின் முன் திட்டங்களை ஊக்குவிக்கும் நோக்கில், காலை மணி 8 முதல் மாலை மணி 5.30 வரை நடைபெறும் இந்த ரோட்ஷோ நிகழ்வில் கவிஞர்களின் படைப்புகள், கலாச்சார நடனங்கள், தற்காப்பு கலைகள் மற்றும் அதிர்ஷ்ட குழுக்கள் போன்றவையும் இடம்பெறும். அதுமட்டுமில்லாமல், கூடுதலாக இலவச சுகாதார பரிசோதனை திட்டம் (சிலாங்கூர் சாரிங்) மற்றும் ஜுவாலான் எஹ்சன் இணைக்கப் பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இரண்டாம் கட்டமான, மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால் சிலாங்கூர் மக்களுக்காக உருவாக்கிய பல்வேறு புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவது நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் ஜூன் 19 அன்று அம்பாங்கில் உள்ள தாமான் கோசாஸ் அம்பாங் ஜெயாவில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கோலா லங்காட், டத்தாரன் பத்தாய் மோரிப் மற்றும் உத்தாமா குவாலா மண்டபம், கோலா சிலாங்கூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் முதல் கட்டம் எம்பிபிஜெ (MBPJ) டத்தாரான் பவுல்வர்டு, பெட்டாலிங் ஜெயா மற்றும் கோம்பாக்கில் உள்ள படாங் அவாம் பத்து குகையிலும் நடைபெற்றது.


Pengarang :