ECONOMY

நடுத்தர வருமான வரம்பு M40 குடும்பங்களுக்கும் எம்பிஐ உதவும்

கோலா லங்காட், டிச 1 : சிலாங்கூர் மந்திரி புசார் கட்டமைப்பு அல்லது எம்பிஐ, ஜனவரி தொடக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ள பள்ளிக்குத் திரும்பும் திட்டத்தின் மூலம் M40 குடும்பங்களுக்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

RM4,000 மற்றும் அதற்கு மேல் குடும்ப வருமானம் பெறும் குடும்பங்களையும் அத்திட்டத்தில் இணைத்துள்ளதாக அதன் நிறுவன சமூகப் பொறுப்பு தலைவர் அஹ்மத் அஸ்ரி ஜைனல் நோர் கூறினார்.

“முன்பு, RM3,000 மற்றும் அதற்கும் குறைவான குடும்ப வருமானம் பெறும் B40 தரப்பினருக்கு மட்டுமே நாங்கள் இத்திட்டத்தைச் செயல் படுத்தினோம் எனக் குறிப்பிட்டார்.

“ஜகாத் மற்றும் சிலாங்கூர் வளமான வாழ்க்கை உதவித் திட்டம் (பிங்காஸ்) பெறுபவர்கள் பள்ளிக்குத் திரும்புதல் திட்டத்தில் இருந்து உதவி பெற முடியாது என்ற சிறிய மாற்றத்தையும் நாங்கள் செயல் படுத்தியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

இன்று கோலா லங்காட்டின் பந்திங்கில் உள்ள சுங்கை மங்கிஸ் தேசியப் பள்ளியில் பங்கேற்புச் சான்றிதழ் மற்றும் யுஎம்பிஐ (UMBI) மாணவர்களுக்குச் சிறப்பு விருது வழங்கும் விழாவுக்குப் பிறகு செய்தியாளர்கள் அவரைச் சந்தித்தனர்.

ஒவ்வொரு மாநிலச் சட்டமன்றத்திலும் (DUN) 300 பெறுநர்களுக்கு இந்த உதவி ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.


Pengarang :