ALAM SEKITAR & CUACA

சிலாங்கூர் மற்றும் பேராக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

கோலாலம்பூர், டிச 1: நேற்று பிற்பகல் மணி 4 நிலவரப்படி, பேராக் மற்றும் சிலாங்கூரில் உள்ள மூன்று மாவட்டங்கள் இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) தெரிவித்துள்ளது.

   நேற்றைய அறிக்கையில், 402 பேர் இதுவரை நான்கு தற்காலிகத் தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) தங்கி இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது என நட்மா தெரிவித்தது.  இதன் விளைவாக சிப்பாங், ஹுலு சிலாங்கூர் மற்றும் அம்பாங் ஜெயா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.

“பாதிக்கப்பட்ட 90 பேர்க்கும் இடமளிக்க சிப்பாங் மாவட்டத்தில் இரண்டு பிபிஎஸ் திறக்கப்பட்டுள்ளது” என்று அறிக்கை கூறுகிறது.

இதற்கிடையில், சிலாங்கூரில் இரண்டு ஆறுகளில் நீர் மட்டம் எச்சரிக்கை அளவீடைப் பதிவு செய்துள்ளன, அவை உலு லங்காட்டில் உள்ள சுங்கை செமினி மற்றும் உலு சிலாங்கூரில் உள்ள சுங்கை பெர்னாம் ஆகும்.

திராங்கானு மற்றும் கிளந்தான் மாநிலங்களில் உள்ள சுங்கை செத்தியு, சுங்கை டுங்குன், சுங்கை கெமாமன், சுங்கை பாக்கா, சுங்கை பெசுட் மற்றும் சுங்கை கோலோக் ஆகிய இடங்களிலும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நேற்று பிற்பகல் மணி 3 அளவில் ஜெபிஎஸ் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

  அனைத்து குடியிருப்பாளர்களும், குறிப்பாக வெள்ளம் எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது வெள்ளப் பேரிடர் மேலாண்மை நிறுவனங்களின் அறிவுறுத்தல்களுக்கு கீழ்ப்படிவதற்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மெட்மலேசியா டிசம்பர் 1 முதல் 4 வரையான காலப்பகுதியில் கிழக்கு சபா, கிழக்கு கடற்கரை மற்றும் தீபகற்பத்தின் வடக்கில் தொடர் மழைக்கு எச்சரிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.

– பெர்னாமா


Pengarang :