ALAM SEKITAR & CUACA

ஒரு மணி நேரத் தொடர் மழை காரணமாக நெடுஞ்சாலையில் வெள்ளம்

கோலாலம்பூர், டிச 1: கனமழை மற்றும் அடைக்கப்பட்ட வடிகால்கள் காரணமாக புத்ராஜெயா வழித்தடத்தில் காஜாங் சில்க் நெடுஞ்சாலையில் நேற்று பிற்பகல் மணி 5 அளவில் சுங்கை ரமால் லுவார், காஜாங் நோக்கிச் செல்லும் காஜாங் சில்க் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மீட்டர் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோரஸாம் காமிஸ் கூறுகையில், இச்சம்பவம் தொடர்பான அழைப்பை பெற்ற பிறகு, காஜாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (பிபிபி) எட்டு பேர் கொண்ட குழு தேவையான கருவிகளுடன் அவ்விடத்திற்கு விரைந்தது.

“தீயணைப்புத் துறையினர் ஆய்வில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை யைத் தொடர்ந்து வடிகால் அடைக்கப்பட்டதால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது கண்டுபிடிக்கப்பட்டது.

“தண்ணீரின் ஆழம் மூன்று அடி (0.91 மீ) இருந்தது. அதனால், எந்த ஒரு வாகனமும் அச்சாலையில் செல்ல முடியவில்லை, இருப்பினும், இந்த சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் வடிந்ததாக என்று நோரஸாம் கூறினார்.


Pengarang :