ECONOMYSELANGOR

இலவசச் சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் முதல் மாநிலம்  சிலாங்கூர்- சட்டமன்ற உறுப்பினர்

ஷா ஆலம், டிச 1: இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக சிலாங்கூர் அரசு திகழ்வதாக புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மாதவிடாய் ஒரு புதிய விஷயம் அல்ல, ஆனால் அது தடைசெய்யப்பட்ட விஷயம் எனக் கருதுவதால் அரிதாகவே விவாதிக்கப்படுகிறது எனக் ஜுவைரியா சுல்கிஃப்லி கூறினார்.

அவரது கூற்றுப்படி, மாதவிடாய் பிரச்சனை என்பது போதிய பணம் இல்லாததால் சானிட்டரி நாப்கின்களை வாங்குவதில் சிரமம் அல்லது சுத்தமான நீர் விநியோகம் மற்றும் பொருத்தமான அகற்றல் தளங்கள் இல்லாமை ஆகியவையாகும்.

இன்று சிலாங்கூர் மாநில சட்டசபையில் 2023 பட்ஜெட் முன்மொழிவு விவாதத்தில் அவர் இவ்வாறு கூறினார் 2018ஆம் ஆண்டு முதல் அனைத்து பொது இடங்களிலும் இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கும் தென்கொரிய உட்பட பல வெளிநாடுகளிலும் இந்த திட்டம் செயல் படுத்துப்படுவதாக ஜுவைரியா கூறினார்,

“சிலாங்கூரில் மாதவிடாய் பிரச்சனையை கையாள்வதற்காக ஒரு பெரிய ஒதுக்கீட்டுடன் இந்தத் திட்டம் வரும் ஆண்டில் தொடரும் என்று நான் நம்புகிறேன்,” என அவர் கூறினார்.

சிலாங்கூர் பட்ஜெட் 2023 ரில் , இத்திட்டத்தின் வழி டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக RM200,000 தொகையை அறிவித்தார், இதில் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்குதல் ஆகியவை அடங்கும்.


Pengarang :