ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மாலை மணி 6 வரை கனமழை எச்சரிக்கை

ஷா ஆலம், டிசம்பர் 1: சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அவை கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்கள் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) தனது முகநூலின் மூலம் தெரிவித்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு மேல் இடியுடன் கூடிய மழை பெய்தால் எச்சரிக்கை அறிக்கை வெளியிடப்படும்.

கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர், பேராக், பகாங், சபா மற்றும் சரவாக் போன்ற மாநிலங்களில் உள்ள பல பகுதிகளிலும் இதே வானிலைதான் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இன்று மதியம் 12 மணி நிலவரப்படி சிலாங்கூர் மற்றும் பேராக்கில் உள்ள ஐந்து தற்காலிக தங்கும் மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 147 குடும்பங்களைச் சேர்ந்த 513 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.


Pengarang :