ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

சமூக ஊடகங்களை நல்வழியில் பயன்படுத்துமாறு சிலாங்கூர் மந்திரி புசார் அறிவுறுத்தல்

ஷா ஆலாம், டிச 3: சமூக ஊடகங்கள் அதன் பயனர்களுக்கு தங்கள் திறமைகளை முன்னிலைப்படுத்தவும், தகவல் மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது, எனவே சமுக ஊடகங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

வெளிநாட்டு எழுத்தாளர் டயானா டார்கேவின் உதாரணத்தை எடுத்துக் கொண்டு அவர் கூறுகையில், ட்விட்டர் பக்கத்தில் அந்தப் பெண்ணின் பகிர்வு, இப்போது அரபு, பிரெஞ்சு, ஜெர்மன், சீனம், ஜப்பானியம் மற்றும் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களாக வெளியிடத் தூண்டியது என டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி (SIBF) 2022யைத் தொடக்கி வைத்து உரையாற்றிய டத்தோஶ்ரீ அமிருடின், அறிவும் சரியான கல்வியும் மிகவும் முக்கியம் என்றார்.

“இந்த நாட்டிலும் சிலாங்கூரிலும், சரியான கல்விதான் மக்கள் சிறந்த வாழ்க்கையைப் பெற அனுமதிக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம், அதுதான் இந்த புத்தகத் திருவிழாவை ஏற்பாடு செய்ததற்கான முக்கிய நோக்கம்” என்று அவர் கூறினார்.


Pengarang :