ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை ஆபத்தான நிலையில் அதிகரிப்பு

ஷா ஆலம், டிச 6 – சிலாங்கூரில் கோவிட்-19 ஊரடங்கு (எம்சிஓ) முடிவுக்கு வந்தபின் தினசரி டிங்கி சம்பவங்கள் ஆபத்தான விகிதத்தில் அதிகரித்துள்ளதாக மாநிலச் சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

பொதுச் சுகாதாரத்திற்கான மாநில நிர்வாக கவுன்சிலர் டாக்டர் சித்தி மரியா மஹ்மூட் கூறுகையில், நவம்பர் 19 ஆம் தேதியுடன் முடிவடைந்த தொற்றுநோய் வாரத்தில் மொத்தம் 31,822 டிங்கி சம்பவங்கள் பதிவாகி உள்ளன. 46வது தொற்றுநோய் வாரத்திலிருந்து இந்த போக்கு காணப்படுகிறது எனக் குறிப்பிட்டார்.

“கடந்த ஆண்டு இதே வாரத்துடன் ஒப்பிடும்போது இது 131.5 சதவீதம் அல்லது 18,077 வழக்குகள் அதிகமாகும் என்றார். பத்தாங் காலி மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ஹருமைனி ஓமரின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

டிங்கி காய்ச்சலைத் தடுப்பதற்கு ஏடிஸ் கொசுக்களை ஒழிக்க மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் துறைகள் மூலம் அதற்கான திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை சிலாங்கூர் மக்களுக்குச் சுமார் 14,649,397 டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“கூடுதலாக, 4,069,818 அல்லது 89.4 சதவீதம் பேர் கோவிட்-19 பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர்,” என்று சிஜாங்காங் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் அஹ்மட் யூனுஸ் ஹைரியின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

-பெர்னாமா


Pengarang :