ECONOMY

எஸ்ஜி (ESG) அறிக்கையை வெளியிட எம்பிஐ (MBI) தயாராக உள்ளது – மந்திரி புசார்

ஷா ஆலம், டிசம்பர் 6 – எம்பிஐயின் (MBI)  நிலையான எஸ்ஜி (ESG) அறிக்கையை வெளியிட மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தயாராக உள்ளார்.

சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை (ESG) கொள்கைகளை ஏற்கும் முதல் மாநில அரசு நிறுவனம் எம்பிஐயை (MBI) ஆகும் என்றார்.

இக்கொள்கைகள் குறிப்பாக வங்கித் துறைக்கு மதிப்பு சேர்க்கும் எனக் குறிப்பிட்டார்.

“தற்போது, வங்கித் துறை, “ESG` மதிப்புகள் அதன் கடன் தகுதிக்கும் கூடுதல் மதிப்பாக உள்ளது எனக் கருதுகிறது.

“எம்பிஐ மற்றும் பிற துணை நிறுவனங்களின் “ESG“ செயல்திறனைப் பார்க்க நான் அவற்றின் அறிக்கைகளைப் பார்வையிடுவேன்,” என்று அவர் நேற்று சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தின் போது கூறினார்.

புக்கிட் காசிங் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ஆர் ராஜீவின் துணைக் கேள்விக்கு அமிருதீன் பதிலளித்தார்.

சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை (ESG) கொள்கைகள் என்பது ஒரு நிறுவனத்தின் நடைமுறைகள் மற்றும் அதன் நிதி மற்றும் செயல்பாட்டு செயல்திறன் ஆகியவற்றின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு ஒரு அளவுகோலாக பயன்படுத்தப்படுகிறது.


Pengarang :