ECONOMY

குவாங்கில் 39 முறை மலிவு விற்பனை திட்டம், 10,000 குடும்பங்கள் பயனடைந்தன

செலாயாங், டிச 6: குவாங் மாநிலச் சட்டமன்றத்தில் (DUN) சுமார் 10,000 குடும்பங்கள் ஜெலஜா ஏசான் ரக்யாட் திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ளனர்.  இது செப்டம்பர் 6 முதல் இன்று வரை திட்டமிடப்பட்டது.

மொத்தம் 39 முறை இம்மலிவு விற்பனை திட்டம் நடைபெற்ற வேளையில்  இன்று காலை இந்த ஆண்டுக்கான இறுதியான விற்பனை திட்டம் நடந்து முடிந்ததாக குவாங் மாநிலச் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் சலாசியா டிசா தெரிவித்தார்.

“ஒவ்வொரு முறையும் இந்நிகழ்ச்சி நடத்தப்படும்போது, பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏனெனில் கிட்டத்தட்ட அனைத்து பொருட்களும், குறிப்பாக கோழி, முட்டை மற்றும் அரிசி ஆகியவை விற்றுத் தீர்ந்து விட்டன.

“இந்த திட்டம் உண்மையில் மக்களுக்கு உதவுகிறது; காரணம் அவர்கள் மிகவும் மலிவான விலையில் அடிப்படை சமையல் பொருள்களை வாங்க முடியும்,” என்று கூறினார்.

இது போன்ற திட்டத்தை மக்களுக்கு நடத்தியதற்காக மாநில அரசுக்கும், பிகேபிஎஸ் நிறுவனத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

கடந்த செப்டம்பரில் தொடங்கப்பட்ட 56 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய இத்திட்டம் டிசம்பர் 6 ஆம் தேதி முடிவடைய இருந்தது, ஆனால்  இத்திட்டத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை தொடர்ந்து அடுத்த ஆண்டு மார்ச் வரை இது தொடரும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.


Pengarang :