ECONOMYNATIONAL

வேலையில்லாப் பிரச்சினை குறைந்து வருகிறது – மலேசியப் புள்ளியியல் துறை

கோலாலம்பூர், டிசம்பர் 9: கோவிட்-19 தொற்று நோய்க்குப் பிறகு நாட்டில் வேலையின்மை சற்று குறைந்துள்ளது, கடந்த செப்டம்பரில் 605,000 பேர் வேலையின்றி இருந்த நிலையில் அக்டோபரில் அந்த எண்ணிக்கை 602,000 பேர் பதிவாகியுள்ளதாக மலேசிய புள்ளியியல் துறை (DOSM) தெரிவித்துள்ளது.

அக்டோபரில் வேலையின்மை விகிதம் 3.6 சதவீதமாக இருந்தது, ஆனால் இது பிப்ரவரி 2020 இல் தொற்று நோய்க்கு முந்தைய 3.3 சதவீதத்தை விட 0.3 சதவீதம் அதிகமாகும் என தலைமை புள்ளியியல் நிபுணர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அக்டோபர் மாதத்தில், 16.68 மில்லியன் மக்கள் தொகையில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 0.2 சதவிகிதம் அதிகரித்து 16.68 மில்லியனாக இருந்தது, அதே நேரத்தில் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் (KPTB) 69.7 சதவிகிதமாக உள்ளது எனத் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு நிலை குறித்து, முகமட் உசிர் கூறுகையில், அக்டோபர் மாதத்தில் 12.20 மில்லியன் மக்கள் தொகையில் தொழிலாளர் பிரிவு 75.9 சதவீதமாக இருந்தது எனக் குறிப்பிட்டார்.

அக்டோபரில் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி விவரித்த அவர், வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை முந்தைய மாதத்தில் 496,600 பேருடன் ஒப்பிடும்போது 1.1 சதவீதம் குறைந்து 491,300 பேராகப் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார், அதே நேரத்தில் செயலற்ற வேலையில்லாதவர்கள் 2.1 சதவீதம் அதிகரித்து 110,700 பேராக உள்ளனர் என்றார் (செப்டம்பர் – 108,400).

– பெர்னாமா


Pengarang :