ACTIVITIES AND ADSECONOMYPBT

 26 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு  கெந்திங் சுற்றுலா- முனிசிபல் கவுன்சில் ஏற்பாடு

ஷா ஆலம், டிச 10: உலு சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில் (எம்பிஹெச்எஸ்) மொத்தம் 26 மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் கடந்த புதன்கிழமை அன்று கெந்திங் மலைக்கு அழைத்து சென்றுள்ளது.

உலு சிலாங்கூர் சமூகத்தில் உள்ள புனர்வாழ்வு மையங்களில் இருந்து அக்குழந்தைகளுக்கு ஊனமுற்றோருக்கான சிறப்பு விருது திட்டத்துடன் இணைந்த இந்நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“இந்த திட்டத்தின் நோக்கம் அக்குழந்தைகளுக்கு உடல் செயல்பாடுகள், அனுபவம் மற்றும் வெளியுலகம் தொடர்பான புதிய தகவல்கள் அறிய, அனுபவிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று முகநூல் மூலம் தெரிவிக்கப் பட்டுள்ளது.

“ஊனமுற்றோர் சமூகத்திற்கான உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும்,” என்றும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தன்னார்வத் தொண்டர்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் இந்த திட்டம் பெற்றுள்ளது.


Pengarang :