ALAM SEKITAR & CUACA

அம்பாங் நிலச்சரவு- தீர்வுக்கான வழி முறை குடியிருப்பாளர்களிடம் இன்று தாக்கல்

அம்பாங், டிச 13- அம்பாங், தாமான் ஹலாமான் நிலச்சரிவு பிரச்சனைக்குத்
தீர்வு காண்பதற்கான வழி முறையை அம்பாங் ஜெயா நகராண்மைக்
கழகமும் பொதுப்பணி இலாகாவும் இன்று வட்டார குடியிருப்பாளர்களிடம்
தாக்கல் செய்யவுள்ளன.

அப்பகுதியில் ஏற்படக்கூடிய மண் நகர்வை அணுக்கமாக கண்காணிக்கும்
அதேவேளையில் அது தொடர்பான தகவல்களை உடனுக்குடன்
அதிகாரிகளிடம் தெரிவிக்கும்படி வட்டார மக்களை வீடமைப்புத்
துறைக்கான ஊராட்சி மன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கேட்டுக்
கொண்டார்.

அப்பகுதியிலுள்ள மலைச்சாரலை வலுப்படுத்துவதற்கான வழி
முறைகளை ஆராயும்படி நகராண்மைக் கழகத்தையும் பொதுப்பணி
இலாகாவையும் நான் பணித்திருந்தேன். இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான
வழி முறை இன்று அப்பகுதி குடியிருப்பாளர்களிடம் தாக்கல் செய்யப்படும்
என்றார் அவர்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதி அம்பாங், தாமான் ஹலாமானில்
ஒன்பது மீட்டர் உயர மலைச்சாரல் சரிந்த சம்பவத்தில் முதியவர்
உள்பட அறுவர் காயங்களுக்குள்ளாயினர்.


Pengarang :