ALAM SEKITAR & CUACA

திராங்கானு, பகாங், ஜோகூரில் இன்று  இடியுடன் கூடியக் கனமழை

கோலாலம்பூர், டிச 13: திராங்கானு, பகாங் மற்றும் ஜோகூரில் இன்று பிற்பகல் முதல்  இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலு திராங்கானு, டுங்குன் மற்றும் கெமாமன் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று மெட்மலேசியா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பஹாங்கில் ஜெரான்டுத், பெந்தோங், தெமர்லோ, மாரான், குவாந்தன், பெரா, பெக்கான் மற்றும் ரொம்பின் ஆகிய இடங்களிலும் இதே வானிலை தான். ஜோகூரில், செகாமட் மற்றும் மெர்சிங்கில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-பெர்னாமா


Pengarang :