ECONOMY

கெரமாட் பெர்மாய் விளையாட்டு மைதானம் மேம்படுத்தப்படும்

கோம்பாக், டிச 13: இங்குள்ள டேசா பெண்டிடிக் கெரமாட் பெர்மாய் ஏயு1சி, உலு கிளாங்கில் உள்ள விளையாட்டு மைதானம், உள்ளூர்வாசிகளின் வசதிக்காக மேம்படுத்தப்படும்.

சிலாங்கூர் அரசாங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒதுக்கீடுகள் மூலம் மேற்கூரையை நிறுவுவதற்கு RM250,000க்கும் அதிகமாக செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.

வானிலை பற்றி கவலைப்படாமல் பலர் குறிப்பாக இளைஞர்கள் பயன்படுத்தும் வகையில் அவ்விடத்தின் வசதியை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இதற்கு  ஏற்பாடு செய்துள்ளதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி.

“இது பொதுமக்களின் வேண்டுகோள் மேலும் இதை நிறைய பேர் பயன் படுத்துவதால் கூரை கட்ட வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

“இந்த விளையாட்டு மைதானத்தின் பலனை நான் உணர்கிறேன், மழை அல்லது வெப்பமான காலநிலையில் சமூகத்துடன் கலந்துரையாடல், தற்காப்புக் கலைகள் மற்றும் கொம்பாங் பயிற்சி போன்ற பிற நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய இவ்விடத்தை பயன்படுத்தலாம்,” என்று அவர் கூறினார்.

விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துவதற்கான விண்ணப்பத்தை பரிசீலித்த கோம்பாக் எம்.பி.க்கு நன்றி தெரிவித்தார் அக்கிராமத்து தலைவர் முகமட் ராசி யாக்கோப்.


Pengarang :