ALAM SEKITAR & CUACA

மேரு மாநிலச் சட்டமன்றம் மேலும் இரண்டு தற்காலிக தங்குமிடம் அமைக்க எண்ணம் கொண்டுள்ளது.

ஷா ஆலம், டிச 13: மேரு மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் (ADN) இப்பகுதியில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால் மேலும் இரண்டு தற்காலிக  தங்குமிடங்கள் (PPS) அமைக்க எண்ணம் கொண்டுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அவர்களுக்கு வசதியான இடத்தை ஏற்பாடு செய்து கொடுக்க இவ்வாறு முன்மொழியப்பட்டது என்று முகமட் ஃபக்ருல்ராசி முகமட் மோக்தா கூறினார்.

“மேருவில் இப்போது மூன்று தற்காலிக தங்குமிடம் உள்ளது. ஆனால், மக்கள் தொகை அதிகம் உள்ளதால் இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

“எனவே, மேரு மற்றும்  காப்பாரில் உள்ள இரண்டு மதப் பள்ளிகளைப் புதிய தற்காலிக  மையங்களாக ஆக்குவதற்காக  பரிசோதித்து வருகிறோம்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

குறிப்பாக கடந்த ஆண்டு சிலாங்கூரில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்கு பிறகு, வெள்ளத்தைச் சமாளிக்க தனது தரப்பு  இப்போது சிறப்பாக தயாராகி  விட்டதாக முகமட் ஃபக்ருல்ராசி கூறினார்.

அவரது கூற்றுப்படி, அனைத்து கிராம சமூக மேலாண்மை கவுன்சில்கள் (MPKK) சிறப்பு வெள்ள விளக்கங்கள் மற்றும் இடர்  சிறப்பு தயார் நிலை பயிற்சி வகுப்புகளும் பெற்றுள்ளன என்றார்


Pengarang :