ECONOMY

தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு, ஹிஜ்ரா RM10,000 வரை நிதியுதவி வழங்குகிறது

ஷா ஆலம், டிச 13: தொழில் தொடங்க விரும்பும் சிலாங்கூர் குடிமக்கள் ஜீரோ டு ஹீரோ திட்டத்தில் RM10,000 வரை நிதி உதவிக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்தத் திட்டத்தை mikrokredit.selangor.gov.my மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது 19 ஹிஜ்ரா கிளைகளில் உள்ள நிதி அலுவலகரை தொடர்பு கொள்ளலாம் என்று யயாசன் ஹிஜ்ரா சிலாங்கூர் (Yayasan Hijrah Selangor (Hijrah) தெரிவித்தது.

“ஜீரோ டு ஹீரோ திட்டத்தின் நிதியுதவியின் மூலம் ஹிஜ்ரா சிலாங்கூரில் தொழில் தொடங்க விரும்பும் சிலாங்கூர் மக்களுக்காக ஒரு சிறப்பு வணிக ஸ்கிமை வழங்குகிறது.

“இந்தத் திட்டம், வணிகத்தை புதிதாகத் தொடங்கும் தொழில் முனைவோருக்கு, தொடர்ந்து நன்கு வளர்ந்து வெற்றிகரமான தொழில் முனைவோராக மாற உதவும்.

தேவையான தகுதிகள் பின்வருமாறு:

-மலேசியர்

-ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிலாங்கூரில் வசிப்பவர்

-சிலாங்கூரில் வாக்குப்பதிவு

-வயது 18 முதல் 65 வரை

-வியாபாரத்தில் ஆர்வம்

-வழிகாட்டலுக்கு தயார்

2015யில் நிதி நிறுவனத்தால் நிறுவப்பட்ட RM 710 மில்லியன் மதிப்புள்ள ஏழு வணிக நிதி திட்டங்கள் மூலம் மொத்தம் 555,834 தொழில் முனைவோர் நன்மை அடைந்துள்ளனர்.

ஹிஜ்ரா கூடுதலாக, ஸ்கிம் ஐ-பிஸ்னஸ், ஸ்கிம் ஐ-அக்ரோ, நியாக டாருல் ஏசன் (நாடி) , கோ டிஜிட்டல், ஐ-லெஸ்தாரி மற்றும் ஐ-பெர்முஸ்சிம் ஆகிய ஸ்கிம்களையும் வழங்குகிறது.


Pengarang :