ECONOMY

அடுத்த வாரம் திங்கள் முதல் வணிக உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான மினி கார்னிவல்

ஷா ஆலம், டிச 13: அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (எம்பிஏஜே) வணிக உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான மினி கார்னிவல் டிசம்பர் 19 முதல் 21 வரை ஏற்பாடு செய்துள்ளது.

மூன்று நாள் நடைபெறும் இந்நிகழ்வு காலை மணி 9 முதல் மாலை மணி 5 வரை லெவல் 4 கேலரி, மெனாரா எம்.பி.ஏ.ஜே.யில் நடைபெறும் என்று உள்ளூர் அதிகார சபை அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சிலாங்கூர் ஹிஜ்ராத் திட்டம், சிலாங்கூர் பிளாட்ஃபார்ம் திட்டம் (PLATS) மற்றும் மலேசியாவின் கம்பெனி கமிஷன் (SSM) தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான கண்காட்சிகளும் நடைபெறும்.

மேலும், வளாகத்தின் உட்புற வடிவமைப்பு, விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகள் குறித்து வணிகர்களுக்கு இலவசமாக விளக்கமளிக்க படும்.

பார்வையாளர்களுக்கு பல்வேறு உணவு வகைகளுடன் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு, உரிமம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு துறையை 03-4285 7344/ 7170 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :