ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

எங்கள் கூடாரத்தை மண் மூடியது, ஊர்ந்து சென்று உயிர்த்தப்பினோம்- பாதிக்கப்பட்டவர் கண்ணீர்ப் பேட்டி

ஷா ஆலம், டிச 16- தாங்கள் தங்கியிருந்த தற்காலிக கூடாரத்தை திடீரென மண்மூடியதைத் தொடர்ந்து இடிபாடுகளுக்கு மத்தியில் ஊர்ந்து சென்று உயிர்த்ப்பியதாக ஜாலான் கெந்திங்- பத்தாங் காலி சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர் கூறினார்.

எனினும், இந்தப் பேரிடரிலிருந்து உயிர்த்தப்ப முடியாமல் தன் இளைய சகோதரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தே லின் ஷூவான் (வயது 22) தெரிவித்தார்.

எங்களின் கூடாரம் திடீரென வலுவிழந்த்தைப் போல் நாங்கள் உணர்ந்தோம். கண்ணிமைக்கும் நேரத்தில் கூடாரம் மண் குவியலால் மூடப்பட்டது. நான் சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு தப்பியோடினேன். என் பெற்றோர்களும் ஊர்ந்தவாறு வெளியில் வந்தனர் என்றார் அவர்.

இந்த சம்பவம் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்ததால் சிறார்களும் கைகுழந்தைகளும் பலியாக நேர்ந்ததாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

இதனிடையே, இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றோரு நபரான லியோங் ஜிம் மெ (வயது 57) கூறுகையில், எதிர்பாராத விதமாக தங்களின் கூடாரத்தை மண் மூடியதாகவும் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்து தப்பிச் சென்று அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததாகவும் குறிப்பிட்டார்.

விடியற்காலை 2.00 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தின் போது நாங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தோம். அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்திருந்ததால் சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை அறியமுடியவில்லை என்றார் அவர்.


Pengarang :