ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இன்று நாடாளுமன்றம் கூடுகிறது- நம்பிக்கை வாக்கெடுப்பு, சபாநாயகர் தேர்வுக்கு முன்னுரிமை

கோலாலம்பூர், டிச 19- இன்று நடைபெறும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பிரதமர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் சபாநாயகர் தேர்வு ஆகிய இரு அங்கங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

நாட்டின் பத்தாவது பிரதமராக கடந்த மாதம் 24ஆம் தேதி பதவியேற்ற டத்தோஸ்ரீ அன்வாருக்கு உள்ள ஆதரவை உறுதி செய்யும் வகையில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நம்பிக்கைத் தீர்மானம் கூட்டத் தொடர் நிகழ்ச்சி நிரலின் எட்டாவது அங்கமாக இடம் பெற்றுள்ளது.

நடந்து முடிந்த 15வது பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பல கட்சிகளின் ஆதரவுடன் அமைக்கப்பட்டிருக்கும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு தலைமையேற்றுள்ள அன்வாருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதை நிரூபிப்பதற்காக இந்த நம்பிக்கை தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.

பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் முதலாம் தவணைக்கான முதலாவது கூட்டத் தொடர் இன்று தொடங்கி இரு தினங்களுக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத் தொடரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் அதேவேளையில் துணை சபாநாயகர்கள் தேர்வு நடைபெறும்.

மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர்கள் தேர்வு கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரவில் இரண்டாம் மற்றும் ஐந்தாம் இடத்தில் இடம் பெற்றுள்ளன.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக தாம் சபாநயாகர் பதவியைத் துறக்க உள்ளதாக டான்ஸ்ரீ அஸார் அஸிசான் ஹருண் இம் மாதம் 2ஆம் தேதி கூறியிருந்தார்


Pengarang :