ECONOMYNATIONAL

நாடாளுமன்றத்தில் மினி பட்ஜெட்டைப் பிரதமர் இன்று தாக்கல் செய்வார்

கோலாலம்பூர், டிச 20- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சிறப்பு வரவு செலவுத் திட்டத்தை (மினி பட்ஜெட்) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். பொதுச் சேவைத் துறைக்கான செலவினத்தை இந்த 107,718,676,650 வெள்ளி மதிப்பிலான பட்ஜெட் உட்படுத்தியுள்ளது.

இந்த மினி பட்ஜெட்டை பிரதமர் 2022ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நிதிக் குழும சட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டின் அமலாக்கம் வரும் 2023 ஜனவரி முதல் தேதி நடைமுறைக்கு வரும் என்று கூட்ட நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் 2023ஆம் ஆண்டிற்கான விநியோகச் சட்ட மசோதா (2023 பட்ஜெட்)
வரும் 2023 ஜனவரி முதல் தேதிக்குள் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படாது என்ற நிலையில் 2023ஆம் ஆண்டிற்கான விநியோகச் சட்ட மசோதா சட்டமாக்கப்படும் வரை இடைக்காலமாக செலவினங்களை மேற்கொள்வதற்காக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தாக்கல் செய்த 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படுவதற்கு முன்பாவே அதாவது அக்டோபர் 10ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டது.


Pengarang :