தொழில்நுட்பக் கடன் திட்டத்தில் (ஸ்கிம் பின்தார்) கணினிகளைக் கடன் வாங்கும் வாய்ப்பு

ஷா ஆலம், டிச 26: சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (பிபிஏஎஸ்) ஏற்பாடு செய்துள்ள சிலாங்கூர் அடிப்படை தொழில்நுட்பக் கடன் திட்டத்தில் (ஸ்கிம் பின்தார்) கணினிகளைக் கடன் வாங்கும் வாய்ப்பைப் பொதுமக்கள், குறிப்பாகக் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் (பி40) பெற்றுள்ளனர்.

www.ppas.gov.my/form_sepintas இல் இணைக்கப்பட்ட பதிவு விண்ணப்பத்தின் மூலம் அதன் 50 கிளைகளில் கடன் பெறலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தில் 10 யூனிட் டெஸ்க்டாப் கணினிகள் மற்றும் 10 யூனிட் மடிக்கணினிகளின் அதிகபட்ச கடன் காலம் 60 நாட்கள் ஆகும்.

“தொற்று நோய் தாக்கிய காலத்திலிருந்து மாறிவிட்ட கற்றல் முறைகள் காரணமாக டெஸ்க்டாப் மற்றும் மடிக்கணினிகளின் தேவை அதிகரித்து வருவதால் இந்த சேவை வழங்கப்படுகிறது.

“இக்கடன் செயல்முறை புத்தகங்களை இரவல் வாங்கும் செயல்முறை போலவே உள்ளது, ஆனால் கடன் காலம் அதிகமாக உள்ளது, அதாவது அதிகபட்சம் 60 நாட்கள்”.

B40 மாணவர்களிடையே டிஜிட்டல் பிளவைக் குறைக்க மாநில அரசு ஆகஸ்ட் 2 தொடங்கி இத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இணையச் சேவை, நாற்காலிகள் மற்றும் மேசைகள் ஆகியவை கடன் வாங்குபவர்களின் வசதிக்காக வழங்கியதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.

எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் அறிவு சிறந்த சமுதாயத்தை உருவாக்க மாநில அரசு கல்விக்கு முன்னுரிமை அளிக்கிறது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.


Pengarang :