SELANGOR

மலைச்சாரல் சீரமைப்பு பணிகளுக்காகக் புக்கிட் மெலாவத்தி சுற்றுலா மையம் தற்காலிகமாக மூடப்படுகிறது

ஷா ஆலம், டிச 26- கோல சிலாங்கூரில் உள்ள புக்கிட் மெலாவத்தி சுற்றுலா மையம் நாளை தொடங்கி அடுத்த தேதி அறிவிக்கப்படும் வரை பொது மக்களுக்கு மூடப்படுகிறது.

வருகையாளர்களின் பாதுகாப்பு கருதி அங்குள்ள மலைச்சாரலைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள அந்த அந்த உல்லாச மையம் மூடப்படுவதாகக் கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் கூறியது.

வருகையாளர்கள் மற்றும் சுற்றுப்பயணிகள் பாதுகாப்புக்கு புக்கிட் மெலாவத்தி பகுதியில் டிரம் சேவை மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

கோல சிலாங்கூர் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளமாகப் புக்கிட் மெலாவத்தி விளங்கி வருகிறது. இது உள்நாட்டு சுற்றுப்பயணிகளை மட்டுமின்ற வெளிநாட்டினரும் பெரிதும் ஈர்க்கும் இடமாகத் திகழ்கிறது.

இங்குள்ள மெலாவத்தி குன்று. பழங்கால பீரங்கி, அரச கல்லறை, ஏழு கிணறுகள், சீலாட் திடல், 100 படிக்கட்டுகள் போன்ற சுற்றுப்பயணிகளைப் பெரிதும் ஈர்க்கும் இடங்களில் சிலவாகும்.

அந்த வரலாற்றுப் புகழ் வாய்ந்த பகுதி தரம் உயர்த்துவதற்காக மெலாவத்தி நகர் சிறப்பு பிரதேசப் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளதாக நகராண்மைக் கழக தலைவர் ரஹிலா ரஹ்மாட் முன்னதாக அறிவித்திருந்தார்.


Pengarang :