SELANGOR

சுத்திகரிக்கப்பட்ட நீர்  விநியோகம் தடை பட்ட   நான்கு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் படிப்படியாக நீர் விநியோகம் மேம்படுகிறது

ஷா ஆலம், டிச 26: சுங்கை செமினி மற்றும் புக்கிட் தம்போய் நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் பணி நிறுத்ததால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில், நேற்றிரவு முதல் படிப்படியாக நீர் விநியோகம் செய்யப்படுகிறது.

சிலாங்கூர் நீர் மேலாண்மையின் (சிலாங்கூர் ஆயர்) காலை 6 மணி நிலவரப்படி, கோலா லங்காட்  அதிகபட்ச விழுக்காடு நீர் விநியோகத்தை  பதிவு செய்துள்ளது (93 சதவீதம்), அதைத் தொடர்ந்து உலு லங்காட் (83 சதவீதம்), பெட்டாலிங் (54 சதவீதம்) மற்றும் சிப்பாங் (51 சதவீதம்).

பயனரின் இருப்பிடத் தூரத்தைப் பொறுத்து நீர் விநியோகத்தை மீட்டெடுப்பதற்கான காலம் அமையும்.

“பிற பகுதிகளில் மீட்பு செயல்முறை திட்டமிட்டபடி நடப்பதை உறுதிசெய்ய, நீரைப் பெறும் பயனர்கள் தண்ணீரை கவனமாக பயன்படுத்துவார்கள் என்று ஆயர் சிலாங்கூர் நம்புகிறது” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நெகிரி செம்பிலான் பண்டார் செரானியா அருகே இலிட் நெடுஞ்சாலையில் சுமை ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானது. அதன் விளைவாக 1,000 லிட்டர் பெர்ஃப்யூம் எசன்ஸ் கசிந்ததால் துர்நாற்றம் மாசு ஏற்பட்டது, மேலும் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க சம்பந்தப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுத்தப்பட்டன.

துர்நாற்ற மாசு சம்பவத்தைத் தொடர்ந்து, 472 பகுதிகள் திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடைகளை சந்தித்தன.


Pengarang :