ANTARABANGSA

இன்று சுனாமி பேரிடரின் 18ஆம் ஆண்டு நிறைவு நாள்- உயிரிழந்தவர்களுக்கு உலகம் முழுவதும் பிராத்தனை

கோலாலம்பூர், டிச 26 –  உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரம்
பேரின் உயிரைப் பறித்து கோடிக்கணக்கான வெள்ளி மதிப்புள்ள
சொத்துக்களை அழித்த சுனாமி பேரலை பேரிடர் நிகழந்து இன்றுடன்
இன்றுடன்  18 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கடந்த 2004ஆம் டிசம்பர்
26ஆம் கிறிஸ்துமஸ் குதுகலத்திலிருந்து உலக மக்கள் விடுபடாத
நிலையில் அதிகாலை வேளையில் உலகையே உலுக்கும் அந்த
பேரிடர் நிகழ்ந்தது.

இந்தோனேசியாவின்  சுமத்திரா தீவின் கடற்பகுதியில்   அதிகாலை வேளையில்
ரிக்டர் கருவியில்     9.1  முதல்  9.3 அளவில் பதிவான நில நடுக்கம் ஏற்பட்டது.
இதனால் இந்திய பெருங்கடலில் 30 மீட்டர் உயரத்திற்கு  ஆழி பேரலை உண்டாகி
இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, இந்தியா, இலங்கை, மாலத்தீவுகள்
உட்பட  14 நாடுகளின் கடலோரப் பகுதிகளை தனது கோரப் பசிக்கு
இரையாக்கிக் கொண்டதோடு  லட்சக்கணக்கான மக்களையும்  வாரிச்
சுருட்டி கடலுக்குள் இழுத்துச் சென்றது.

இந்த ஆழிப் பேரலையில் மலேசியாவும் தப்பவில்லை என்பது
துரதிர்ஷடசமான விஷயமாகும்.   கெடா மற்றும் பினாங்கில் ஏற்பட்ட
சுனாமி பேரிடரால் 137 பேர் பேர் மாண்டனர்.  ஆறு பேர் காணாமல் போனதாக
அறவிக்கப்பட்டது . இதுதவிர   நுற்றுக்கும் மேற்பட்டடோர் காயம் அடைந்தனர்.
கெடா மற்றும்  பினாங்கில் கடலோரப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளும்
மீன்பிடி கிராமங்களும் சுனாமி பெரும் சேதத்தை எதிர்கொண்டன.

இந்த சுனாமி பேரிடரில் இந்னோசியாவின் ஆச்சேவில் நகரில் மட்டும் ஒரு
லட்சத்திற்கும் மேற்பட்டோர்   மரணம் அடைந்ததோடு  கிட்டத்தட்ட  40,000 பேர்
காணாமல் போயினர், இந்தியாவில் தமிழகத்தில் சென்னை,  கன்னியாகுமரி,
நாகப்பட்டினம், வேளாங்கண்னி   போன்ற மாவட்டங்களிலும் ஆழி பேரலை பெரிய
உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது. சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்கள் ஆண்டுதோறும்
சுனாமி நினைவு தினத்தில் கடலில் பாலை ஊற்றியும் . மலர்களை தூவியும் அஞ்சலி

செலுத்தி வருகின்றனர்.  இப்போது பெரும்பாலான நாடுகளில்  சுனாமி எச்சரிக்கை
கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதால்  சுனாமி பேரிடர் அழிவு தடுக்கப்பட்டுள்ளது.


Pengarang :