ECONOMYMEDIA STATEMENTNATIONAL

2023ஆம் ஆண்டு பட்ஜெட் பிப்.24ஆம் தேதி மக்களவையில் மீண்டும் தாக்கல்

கோலாலம்பூர், டிச 29- திருத்தப்பட்ட 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரும் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்வார்.

இவ்விவகாரம் தொடர்பில் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சின் அதிகாரி ஒருவர், அந்த தேதி உறுதியானது என சுருக்கமாக  பதிலளித்தார்.

சேவைக்கான செலவுகள் மற்றும் சம்பள பட்டுவாடா ஆகிய நடவடிக்கைகளுக்காக அண்மையில் மினி பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி 2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று மக்களவை சபாநாயகர் டத்தோ ஜோஹாரி அப்துல் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

பட்ஜெட் தாக்கல் மற்றும் விவாதங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு 21 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படும் என்று அவர் கூறியதாக தி ஸ்டார் ஆன்லைன் இணைய ஏடு தெரிவித்துள்ளது.

பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் இரண்டாம் தவணைக்கான முதலாவது கூட்டம் வரும் மார்ச் மாதம் 13ஆம் தேதி தொடங்கி மார்ச் 30ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற அகப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :