ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இலவச  டியூஷன் வகுப்புகள் தமிழ்ப் பள்ளிகளுக்கும்  விஸ்தரிக்க தக்க இடங்களை  அடையாளம் காண மந்திரி புசார் ஆர்வம்

ஷா ஆலம், டிச. 30 – இங்குள்ள மிட்லெண்ட்ஸ் தங்கும் விடுதியில்  SPM இந்திய மாணவர்களுக்கு  2 நாள்  திறன்  மேம்பாடு வகுப்பை  சிலாங்கூர் மாநில அரசு  எஸ்.ஐ.சி.சி மிட்லெண்ட்ஸ் பள்ளி வாரியம் மற்றும் சில அரசு சாரா இயக்கங்கள் இணைந்து நடத்தியது.

அதில் பேசிய மந்திரி புசார், மலேசியர்களால்  அதிகம் செய்ய முடியும்,  அதில் இந்திய சமுதாயமும் விதிவிலக்கல்ல  என்றார்.  இந்த மாநில அரசின் தாரக மந்திரமாக இருப்பது ” எந்த மாந்தரும் இங்கு கைவிடப்படார்”  என்பது இங்கே அனைவருக்கும்  அனைவருக்கும் போதுமானது  உண்டு, ஆனால்  அதற்கு நாம் பாடுபட வேண்டும்.

மாநிலத்தில் நடத்தப்படும் இலவச டிவிஷன் வகுப்புகள் இவ்வாண்டு, மார்ச் மாதத்தில் தொடங்கும் என்றும், மேலும் சுமார் 2,000 மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.

“அதற்கான பாடத்திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டதாகவும், ஆனால் ஆசிரியர்களுக்கு உபகரணங்கள் மற்றும் மாணவர்களுக்கு மதிய உணவுக்கும் நிதி வழங்குவது போன்ற பல அம்சங்களில் கவனம் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றார்.

மாநிலத்தில் கல்வியை இடையில் கைவிடும் இந்தியர்கள்  பிரச்சனையை சமாளிக்க இலவச பிரத்தியேக வகுப்புக்களை  ஊக்குவிக்க  தமிழ்ப்பள்ளிகளுக்கும் இத் திட்டத்தை  விஸ்தரிப்பது குறித்து பேசிய அவர்.

இந்தியர்கள்  அதிகம்  குடியிருக்கும்  இடமாகவும்  அதிக  குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள்  வாழும்  இடங்களில் ஒன்றான  தேச மென்தாரி” அடையாளம் காணப் பட்டு இருப்பதாக கூறிய அவர், இதுபோன்ற தேவையுள்ள இடங்களை  பரிந்துரைக்க கேட்டுக்கொண்டார்.

இதில் முன்னால் கிள்ளான் நாடாளுமன்ற  உறுப்பினர் திரு. சார்ல்ஸ்  சந்தியாகோ, கிள்ளான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ், மிட்லெண்ட்ஸ் பள்ளியின் வாரிய உறுப்பினர்கள்  முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.


Pengarang :