HEALTHMEDIA STATEMENT

கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 417 பேர் பாதிப்பு- நான்கு மரணங்கள் பதிவு

ஷா ஆலம், ஜன 2- நாட்டில் நேற்று 417 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் மூன்று சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டன.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய நான்கு மரணச் சம்பவங்கள் நேற்று பதிவானதாக சுகாதார அமைச்சின் கே.கே.எம்.நாவ் அகப்பக்கம் கூறியது.

இந்த புதிய மரணச் சம்பவங்களுடன் சேர்த்து  நாட்டில் இந்த நோய்த் தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 36,857ஆக உயர்வு கண்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி நாட்டில் மொத்தம் 11,871 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றின் தீவிர தாக்கத்தை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களில் 11,232 பேர் அல்லது 94.6 விழுக்காட்டினர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 609 நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 30 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒன்பது பேருக்கு செயற்கைக் சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து நேற்று 547 பேர் குணமடைந்தனர். இவர்களுடன் சேர்த்து இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 49 லட்சத்து 78 ஆயிரத்து 369 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :