SELANGOR

மாற்றுத் திறனாளி நலன் காக்கும் திட்டங்களுக்கு 3 கோடி வெள்ளி ஒதுக்கீடு- மந்திரி புசார்

ஷா ஆலம், ஜன 9- மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கு முக்கியத்துவம்
தரும் மாநில அரசின் கொள்கைகேற்ப அத்தரப்பினருக்கான உதவித்
திட்டங்கள் ஸ்கிம் மெஸ்ரா இன்சான் இஸ்திமேவா (எஸ்.எம்.ஐ.எஸ்.)
எனும் பிரத்தியேக மனுக்குல பரிவுத் திட்டத்தின் வாயிலாக
சீரமைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு பொருள்கள் வாங்குவதற்கான
உதவித் தொகையாக ஆண்டுக்கு 150 வெள்ளியும் மரண சகாய நிதியாக
1,000 வெள்ளியும் வழங்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி சொன்னார்.

முன்பு மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு
அவர்களின் பிறந்த மாதத்தின் போது பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டு
வந்தன. இப்போது அந்த பற்றுச்சீட்டுகளை அந்த வருடத்தில் எப்போது
வேண்டுமானாலும் அவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றார் அவர்.

இந்த திட்டம் மொத்தம் 3 கோடியே 5 லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டைக்
கொண்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் 22ஆம் தேதி வரை இந்த
திட்டத்திற்கு மொத்தம் 441,880 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில்
417,003 மூத்த குடிமக்களும் 24,877 மாற்றுத் திறனாளிகளும் அடங்குவர்
என்று அவர் சொன்னார்.

முடிந்த வரை மாநிலத்திலுள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும்
மூத்த குடிமக்களுக்கும் உதவிகளை நல்க நாங்கள் முயன்று வருகிறோம்
என அவர் கூறினார்.


Pengarang :