MEDIA STATEMENTNATIONAL

தடுப்பூசி பெறாததால் பணி நீக்கம்- முடிவை எதிர்த்து முன்னாள் இராணுவ வீரர் செய்த மனு நிராகரிப்பு

கோலாலம்பூர், ஜன 12- கோவிட்-19 தடுப்பூசியைப் பெற மறுத்ததற்காக பணி நீக்கம் செய்த அதிகாரிகளின் முடிவை எதிர்த்து முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் செய்து கொண்ட மனுவை  இங்குள்ள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வான் ரம்லி வான் செமான் என்ற அந்த முன்னாள் இராணுவ வீரர் செய்திருந்த அந்த சீராய்வு மனுவை தாம் தள்ளுபடி செய்வதாக நீதிபதி டத்தோ அகமது கமால் முகமது சஹிட் தனது தீர்ப்பில் கூறினார்.

மனுதாரரை பணி நீக்கம் செய்வதற்கு சட்டத்திற்கு உட்பட்டு முடிவு எடுக்கப்பட்டதோடு சட்டவிரோதம், பகுத்தறிவின்மை மற்றும் நடைமுறை முறைகேடுகளால் இந்த முடிவு களங்கப்படவில்லை என்று நீதிபதி தெரிவித்தார்.

இந்த மனுவில் லெப்டிணன்ட் கர்னல் ஷாருள்  ஹிஷாம் முகமது யாசின், லெப்டிணன்ட் முகமது அஸாமுனிர் அஸ்ரி, இராணுவத் தலைமை தளபதி டான்ஸ்ரீ ஜம்ரோஸ் முகமது ஜென், இராணுவப் படை மற்றும் அரசாங்கத்தை அவர் பிரதிவாதிகளாகப்வான் ரம்லி பெயர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு 4ஆம் தேதியிட்ட பணி நீக்க கடிதம் மற்றும் பணியிலிருந்து முன்கூட்டியே விடுவிக்கப்பட்டது ஆகிய நடவடிக்கைளை செல்லத்தக்கவை அல்ல என அறிவிக்கக் கோரி அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.


Pengarang :